ஏமன் அரசு தனது கட்டுப்பாட்டில் இருந்த செங்கடல் கடற்கரைப் பகுதியிலிருந்து பின்வாங்கியுள்ளது. ஏடன் நகரை ஹூதிக்களிடம் பாதுகாக்கும் பொருட்டு ஏமன் அரசு தனது முழுப் படையையும் ஏடனுக்குத் திருப்பியுள்ளது. செப்டம்பர் மாதம் செங்கடல் கடற்கரைப் பகுதிகளை ஏமன் அரசு ஹூதிக்களிடமிருந்து கைப்பற்றியது.
ஏமன் நாட்டின் வர்த்தக மையம் ஏடன். துறைமுக நகரம். பத்து லட்சத்துக்கும் அதிகமான மக்கள் வசிக்கும் பகுதி. ஏமன் அரசு 2014இல் இருந்து ஏடனிலிருந்து இயங்கி வருகிறது. அவ்வாண்டில் தலைநகரம் சனாவை ஹூதிக்கள் கைப்பற்றினார்கள். அப்போதிலிருந்து ஏமன் அரசு ஏடனைத் தலைநகராகக் கொண்டு இயங்கி வருகிறது.
ஏமன் நாட்டை ஒரு முக்கோணமாக வரித்துக் கொண்டால், ஏடன் அதன் ஒரு முனை. பாப் அல் மண்டப் (கண்ணீரின் நுழைவாயில்) பகுதியை அதன் எதிர்முனை என்று சொல்லலாம். தற்போது ஹூதிக்கள் ஏடன் பகுதியை முற்றுகையிடத் தொடங்கியுள்ளனர். ஏடனைப் பாதுகாக்க, பாப் அல் மண்டப் நீர்வழிப் பாதையை ஏமன் அரசு இழந்துள்ளது. ஏடனை இழந்தால் நாட்டையே இழந்தது போல ஆகிவிடும். அதைத் தடுக்க, ஏமன் அரசு இம்முடிவை எடுத்துள்ளது.















Add Comment