முத்தால ராவுத்தர்
முத்தால ராவுத்தர் பல வண்ணங்களில் குல்லா அணிவார். ஆனால் நீலநிறத்தில் மட்டுமே அங்கி உடுத்துவார். சீராகக் கத்தரிக்கப்பட்ட தாடி. இவை அவருடைய அடையாளம்.
சித்து வேலைகள் செய்வதில் கில்லாடி. சில நேரம் அவை ரசிக்க வைக்கும். சில சமயம் பயமுறுத்தும். சமூகச் சீர்திருத்தச் சிந்தனையாளர். அவர் அப்படிப் பேசுவது மட்டும் யாருக்கும் புரியாது. வினோதமாகப் பார்ப்பார்கள்.
அந்தப் பகுதிக்குக் குதிரையில் வந்தார். முதுகில் துணி மூட்டையைக் கட்டியிருந்தார். இடுப்பில் வாளைச் சொருகியிருந்தார். மெக்காவிலிருந்து வந்ததாகக் கூறினார்.
மரியாதையான தோற்றம். யாருக்கும் தொந்தரவு கொடுத்ததில்லை. எல்லாருக்கும் உதவும் குணம். உடல்நலம் சரியில்லை என்றால் கைவைத்தியம் செய்வார். இப்படியிருப்பவரை அகற்ற யாருக்கும் மனம் வரவில்லை. அங்கேயே தங்கிவிட்டார்.
இப்பகுதிக்கு வந்தபோது அவருக்குத் தமிழ் தெரியாது. ஆனால் பேசுவதைப் புரிந்து கொண்டு சைகையில் பதில் சொன்னார். பிறகு திக்கித் திக்கிப் பேச ஆரம்பித்துவிட்டார். பிளாவிடுதிக் கள்ளர் அவருக்கு நண்பராகிவிட்டார். அவர் புதுக்கோட்டை மகாராஜாவின் சம்பந்தி.















Add Comment