Influenza A Virus என்று அழைக்கப்படும் பறவைக்காய்ச்சல், பறவைகளுக்கு ஏற்படும் ஒருவிதத் தொற்றுநோய். காட்டுப் பறவைகளிடத்தில் இந்த வைரஸ் இயற்கையாகவே இருக்கும். தட்ப வெப்பநிலை மாற்றம், உணவுத் தேடல், இனப்பெருக்கம் ஆகிய காரணங்களுக்காகப் பறவைகள் ஓரிடத்திலிருந்து மற்றோர் இடத்துக்கு இடம்பெயரும்போது ஒரு பறவையிடமிருந்து மற்றொன்றுக்கு இந்நோய் பரவுகிறது.
இந்த வைரஸில் நிறைய வகைப்பாடுகள் உண்டு. இதில் H5N1 என்பது பொதுவாக எல்லாவிதமான பறவைகளையும் தாக்கி மரணத்துக்குள்ளாக்கும் கொடுமையான வைரஸ். இந்த வைரஸ் தாக்குண்ட பறவைகள் கொத்துக்கொத்தாக உயிரிழக்கும்.
உணவு மற்றும் இதர தேவைகளுக்காக வளர்க்கப்படும் கோழி, காடை, வாத்து, புறா போன்ற பறவைகள் H5N1 வைரஸினால் தாக்கப்படும்போது, அப்பறவைகளோடு புழங்கும் மனிதர்களுக்கும் இதனால் ஆபத்து ஏற்படும் வாய்ப்புள்ளது. பறவைக்காய்ச்சலால் பெருமளவில் ஏற்படும் பறவைகளின் உயிரிழப்பு, அதனால் மனிதர்களுக்கு ஏற்படும் பொருளாதார இழப்பு ஆகியவை உலகளவில் அச்சமூட்டும் விஷயங்களாக இருக்கின்றன.















Add Comment