தியா கிருஷ்ணகுமார்-ஆதித்யா நடராஜன் தம்பதி ஐடி துறையில் பணிபுரிந்தபோது, தங்களுக்கு ஏற்பட்ட பிரச்சினைக்கான தீர்வை வணிக யோசனையாக மாற்றி வெற்றி பெற்றிருக்கிறார்கள்.
வேலைப்பளு மிகுந்த சூழல். தினமும் ஆரோக்கியமான உணவை வீட்டில் சமைப்பது அவர்களுக்குச் சவாலாக இருந்தது. அதேசமயம், உணவகங்களிலிருந்து அடிக்கடி உணவை அடிக்கடி ஆர்டர் செய்வது ஆரோக்கியத்துக்கு உகந்ததாக இல்லை.
வீட்டில் சமைத்த உணவின் திருப்தியையும் சத்து நிறைந்த எளிதான உணவுகளையும் அவர்கள் விரும்பினார்கள். உணவுச் சந்தா சேவைகள் எதிலும் அவர்கள் விரும்பிய அம்சங்கள் இல்லை. இது தங்களுடைய பிரச்சினை மட்டுமல்ல, தங்களைப் போன்ற வாழ்க்கைமுறையைக் கொண்ட மற்றவர்களுக்கும் இதே இடர்ப்பாடு உள்ளது என்பதை உணர்ந்தார்கள். அன்றாட வாழ்க்கையில் எதிர்கொள்ளும் இந்தச் சவாலை ஒரு வணிக வாய்ப்பாக மாற்ற முயற்சி செய்தார்கள்.















Add Comment