Home » பொய்யோடு விளையாடு – 26
தொடர்கள் • பொய்யோடு விளையாடு

பொய்யோடு விளையாடு – 26

ஒரு பயிற்சி

அமெரிக்காவின் ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த உறுப்பினர் ஆண்டனி வீனர் (Anthony Weiner). 2011ஆம் ஆண்டில் அமெரிக்காவில் இவரைப் பற்றிப் பரபரப்பாகப் பேசிக்கொண்டார்கள். இளம்பெண் ஒருத்திக்குத் தன்னுடைய நிர்வாணப் புகைப்படத்தை வீனர் அனுப்பியதாகக் குற்றம்சாட்டப்பட்டது. அதனைக் கடுமையாக மறுத்தார் அவர். இருப்பினும், மறுக்க முடியாத ஆதாரங்கள் சமர்ப்பிக்கப்பட்டதால் கண்ணீருடன் தன்னுடைய தவறை ஒப்புக்கொண்டார். பல பெண்களிடம் ஏற்கெனவே இப்படி முறைதவறி நடந்ததாகவும் கூறி அதிரவைத்தார்.

தன்னுடைய குற்றத்தை ஒப்புக்கொள்வதற்குச் சில நாள்களுக்கு முன்பு அவர் செய்தியாளர்களிடம் சிக்கிக்கொள்ளும்படி ஆனது. வேறு வழியில்லாமல் அவர்களது கேள்விக்குப் பதிலளித்தார். இந்த உரையாடல் பல ஊடகங்களில் செய்தியாக வெளியிடப்பட்டது. நம்மைப் பொறுத்தவரை இது வெறும் செய்தி மட்டுமல்ல, பாடம், பயிற்சி.

இந்த உரையாடலில் மட்டும் வீனர் சுமார் அறுபதுக்கும் மேற்பட்ட பொய் காட்டும் நடத்தைகளை வெளிப்படுத்தினார் என்கிறார்கள் பொய்யறி நிபுணர்கள். உரையாடலை அப்படியே கீழே தருகிறேன். இந்தப் புத்தகத்தை நீங்கள் இதுவரை படித்திருப்பதால் பொய்யறியும் கலையின் நுணுக்கங்களைத் தெரிந்துகொண்டதாக ஆகிறது. நீங்கள் தெரிந்துகொண்ட அந்த நுணுக்கங்களைக்கொண்டு, இந்த உரையாடலில் உங்களால் எத்தனை பொய் காட்டும் தடயங்களை அடையாளம் காணமுடிகிறது என்று பாருங்கள்.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!