Home » டிஜிட்டல் கேயாஸ் தியரி
கணினி

டிஜிட்டல் கேயாஸ் தியரி

டிஜிட்டல் புயல் ஒன்று கரையைக் கடந்துள்ளது. சென்ற வாரம் அமெரிக்காவில் மையம்கொண்டிருந்தது இப்புயல். டிஜிட்டல் பெருநிறுவனங்களின் சேவைகள் முடங்கின. மைக்ரோசாஃப்ட் தொடங்கி ஆப்பிள் வரை. இதில் தப்பிப் பிழைத்தவர்கள் மிகவும் குறைவு.

சாதாரணச் சம்பவம் என்றாலே சலங்கை கட்டி ஆடும் பதிவர்களால் நிறைந்தது சோஷியல் மீடியா. இப்போது நிகழ்ந்திருப்பது உள்ளபடியே மிகப் பெரிய பேரழிவு.

சும்மா இருப்பார்களா? கதகளி ஆடிக்கொண்டிருக்கின்றனர்.

சைபர் தாக்குதல்கள் என்று ஒரு கோஷ்டி. ஏஐகள் விஸ்வரூபம் எடுத்துவிட்டன என்று பிறிதொரு குழு. ஆளுக்கொரு இலுமினாட்டி இதிகாசத்துடன் களமாடி வருகின்றனர்.

முதல் விக்கெட்டாக மைக்ரோசாஃப்டின் இமெயில் சேவைகள் விழுந்தன. உலகெங்கும் கோடிக்கணக்கான அவுட்லுக் பயனர்களின் மெயில் சேவைகள் தடைப்பட்டன. வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் சைக்கிள்கள் போல மைக்ரோசாஃப்ட்டின் பிற சேவைகளும் ஒன்றன்பின் ஒன்றாகச் சரிந்தன.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!