Home » POK: கொதிநிலையில் மக்கள்
உலகம்

POK: கொதிநிலையில் மக்கள்

பயங்கரவாதத்தின் புகலிடமாக அறியப்படும் ஒரு பிராந்தியத்தில், துப்பாக்கிகளுக்குப் பதிலாகப் புத்தகங்களை ஏந்திய படித்த சமுதாயம் ஒன்று ராணுவத்துக்கு எதிராகப் புரட்சியில் இறங்கியுள்ளது. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரின் (POK) தலைநகரான முசாஃபராபாத், இன்று உலக அரங்கில் அப்படிப்பட்ட ஒரு விசித்திரமான இரட்டை முகத்துடன் காட்சியளிக்கிறது.

ஆயுதக் குழுக்களுக்கும், தீவிரவாத ஊடுருவலுக்கும் பெயர் போன இப்பிராந்தியம், கல்வியறிவிலும் மிக உயர்ந்த விகிதத்தைக் கொண்டுள்ளது என்பது ஆச்சரியமான உண்மை. இன்று இந்த படித்த சமுதாயம்தான் பாகிஸ்தான் அரசின் பொருளாதாரச் சுரண்டலுக்கும் ராணுவ அடக்குமுறைக்கும் எதிராக, ஆயுதமேந்தாமலேயே துணிச்சலுடன் ஒரு மாபெரும் உள்நாட்டுப் புரட்சியில் இறங்கியுள்ளது.

1947இல் பிரிட்டிஷ் இந்தியா பிரிக்கப்பட்டபோது இருந்த 560க்கும் மேற்பட்ட தனித்தனி சமஸ்தானங்கள் இந்தியாவுடனோ அல்லது பாகிஸ்தானுடனோ இணையலாம், அல்லது தனித்து இயங்கலாம் என்று அறிவிக்கப்பட்டது. ஜம்மு காஷ்மீர் சமஸ்தானத்தின் மன்னராக இருந்த மகாராஜா ஹரி சிங், தனது நிலம் தனித்து இருக்க வேண்டும் என்று விரும்பி, எந்தவொரு நாட்டுடனும் உடனடியாக இணையாமல் காலம் தாழ்த்தினார்.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!