Home » Archives for சுவாமி ஓம்கார் » Page 2

Author - சுவாமி ஓம்கார்

Avatar photo

ஆன்மிகம்

சித் – 20

20. நைவேத்தியம்  சாஸ்திரங்களைக் கற்றுக்கொடுக்கும் ஆசிரமம் அது. சுற்றிலும் மலைகள் நிறைந்திருக்க நடுவே கிண்ணம் போன்றிருந்த சூழலில் ஆசிரமம் அமைந்திருந்தது. ஆசிரமத்தின் வழிபாட்டு அறையில் தினசரி பூஜைகளுக்குத் தயார் செய்து கொண்டிருந்தான் மாதவ்நாத். தன் குரு ப்ரணவநாதரின் வழிகாட்டுதலில் பூஜைகளையும்...

Read More
ஆன்மிகம்

சித் – 19

19. சம ஆதி சமாதி என்பது சித்தர்களின் உடல் அடக்கம் செய்யப்பட்டு அதன் மேல் எழுப்பப்பட்ட கோவில் என்பது நமக்குத் தெரியும். கடவுளைக் கும்பிடுவதை விட்டு இறந்த உடலைக் கும்பிடுவது சரியா என்று சிலர் வாதம் செய்வதைக் காண முடியும். சமாதி என்பது உடலை அடக்கம் செய்யும் இடம் எனக் கல்லறை போல நினைத்தால் அது...

Read More
ஆன்மிகம்

சித் – 18

18. மந்திரங்கள் சித்தர்களின் வார்த்தைகள் அர்த்தம் நிறைந்தவை. பெரும்பாலான மனிதர்கள் சித்தர்களின் வார்த்தைக்கு அர்த்தம் புரிந்துகொள்ள முயற்சிப்பதைவிட தங்களின் சோம்பேறித்தனத்திற்கும் ஆணவத்திற்கும் சாட்சியாகச் சித்தர்களின் வார்த்தையைப் பயன்படுத்துவார்கள். ‘மனமது செம்மையானால் மந்திரம் தேவையில்லை’ என்ற...

Read More
ஆன்மிகம்

சித் – 17

17. அது வேறு உலகம் தோற்றமும் முடிவும் இல்லாத சில சித்தர்களைக் கண்டோம். இன்னும் எவ்வளவே பேர் இவ்வரிசையில் இருக்கிறார்கள். அவர்களையும் அறிவதற்கு முன்னால் சித்தர்களின் உலகைப் பற்றிச் சிறிது தெரிந்துகொள்வோம். சித்தர்கள் உலகம் எங்கே இருக்கிறது? அங்கே செல்ல என்ன மாதிரியான வாகனத்தில் செல்ல வேண்டும்? அந்த...

Read More
ஆன்மிகம்

சித் – 16

16. பர்த்ருஹரி ஒரு காலத்தில் இந்தப் பெயர் மிகவும் பிரசித்தி பெற்றது. தமிழகத்தில் காணுமிடமெல்லாம் செந்தில்குமாரும், சரவணனும் நிறைந்திருப்பதைப் போல இந்தியா முழுவதும் பர்த்ருஹரி என்பது சர்வசாதாரணப் பெயராக இருந்தது. வரலாற்றுக் கோலத்தில் பர்த்ருஹரி என்ற பெயர் பல்வேறு முறை புள்ளி வைத்து உள்ளது. பல...

Read More
ஆன்மிகம்

சித் – 15

15. நீரில் இருந்து நீருக்கு… ஆயிரத்து நூறு ராணிகள் சூழ, அந்தப்புரத்தில் படுத்துச் சுகித்து இருந்தான் கோபிசந்த். ஆயிரத்து அறுநூறு அடிமைப் பெண்கள் அவர்களைச் சுற்றி நின்று சாமரம் வீசிக்கொண்டு இருந்தார்கள். இந்திர லோகத்தில் இருந்து இந்தக் காட்சியை கண்டால் இந்திரனுக்குக் கூடப் பொறாமை வரும் அளவுக்குக்...

Read More
ஆன்மிகம்

சித் – 14

14. ஜலந்தர நாத் பெரும் சூரியனைக் காணும் தருணங்களில் நாம் தவறவிடுவது அதைவிடப் பிரகாசமாக வானில் இருக்கும் நட்சத்திரங்களைதான். சூரியனைவிட அவை பலகோடி மடங்கு பிரம்மாண்டமானவை. ஆனால் அவை நமக்கு அருகே இல்லாத காரணத்தால் நம் கவனத்தில் இருப்பதில்லை. நாத ரூபமான சித்தர்களில் பெரும்பாலும் நாம் கண்டு, கேட்டு...

Read More
ஆன்மிகம்

சித் – 13

13. கோரக் நாத் சித்த மரபு விசித்திரம் நிறைந்தது. நமது ஆற்றலுக்கும் அறிவுக்கும் அப்பாற்பட்டு நடைபெறுவதால் சித்தர் உலக விவகாரங்கள் அனைத்தும் அமானுஷ்யமாகப் பார்க்கப்படுகிறது. சித்தர்கள் நம்மைவிட ஒருபடி மேலான நிலையில் இருக்கிறார்கள் என்பதை நமது மனம் ஏற்றுக்கொள்ளும். உயிர்களின் பரிணாமத்தில் ஒரு செல்...

Read More
ஆன்மிகம்

சித்-12

12. ராஜ சித்தர் ‘நான் நிரந்தரமானவன். எனது பெற்றோர் பைரவியும், பைரவனும்’ என பிரகடனப்படுத்திக் கொண்டார், மச்சீந்திரர். இமயமலை அடிவாரம் மற்றும் காஷ்மீரத்தில் தனது ஆசிரமங்களை உருவாக்கி, குழுவாக வாழும் வாழ்க்கை முறையை வழிப்படுத்தினார். தமிழகத்தில் ‘மச்ச சித்தர்’ என்று அழைக்கப்பட்டு சித்த மரபில் இவரின்...

Read More
ஆன்மிகம்

சித் – 11

11. தங்க மீன் சித்தர்கள் இயல்பாகப் பிறப்பதில்லை. தாய் வழியில் பிறக்கும் பொழுது கர்மவாசனையால் அவர்களின் சித்த நிலை மறக்கப்பட்டு விடுவார்கள் என்பதால் சதாசிவ நாதர் போல உடல் எடுத்து வருகிறார்கள். முதல் நிலைச் சித்தர்கள் இவ்வாறு பிறப்பு இறப்பு இல்லாத கால வெளியில் இருக்கிறார்கள். இரண்டாம் நிலைச்...

Read More

இந்த இதழில்

error: Content is protected !!