மதுரை மக்கள் மட்டுமல்லாது தென்மாவட்டங்களில் வசிக்கும் அனைவரும் எதிர்பார்க்கும் ஒரு திருவிழா. மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம், செப்டம்பர் 17 அன்று விமரிசையாக நடைபெறுகிறது. மதுரை மக்களைப் பொறுத்த வரை, தங்கள் வீட்டில் நடக்கும் ஒரு விசேஷம் போலத்தான் இதைப் பார்க்கிறார்கள்.
பொதுவாகவே திருக்கல்யாணம், சித்திரைத் திருவிழா இரண்டையுமே மதுரை மக்கள் மிகப் பெரிதாகக் கொண்டாடுவார்கள். தங்களைத் தேடிக் கடவுளே வரும்போது யாருக்கும் ஒரு மகிழ்ச்சியும் பரவசமும் எழத் தானே செய்யும்? மீனாட்சி அம்மனைப் பொறுத்தவரை அவள் நம் குடும்பத்தில் ஒருத்தி என்ற எண்ணம் மதுரை மக்களுக்கு உண்டு.
















Add Comment