டொனால்ட் டிரம்ப் பெய்ஜிங்கிற்குப் புறப்படும் முன்பே வெற்றியை அறிவித்துவிட்டார். ஆனால் இரண்டு நாள் உச்சி மாநாடு முடிந்தபோது, கையில் இருந்தது வெறும் கங் பாவோ சிக்கனும் டிராமுசின் வாசனையும் மட்டுமே.
சீன அதிபர் ஷி ஜின்பிங்கின் விருந்தோம்பல் நினைவில் இருந்தது; ஆனால் திட்டவட்டமான ஒப்பந்தங்கள் இல்லை. டிரம்ப் பெய்ஜிங்கிற்குப் பதினேழு பெரும் நிறுவனங்களின் தலைவர்களைத் தன்னுடன் அழைத்து வந்தார், எலான் மஸ்க், நிவிடியாவின் ஜென்சன் ஹுவாங், ஆப்பிளின் டிம் குக், போயிங் தலைமை நிர்வாகி கெல்லி ஆர்ட்பெர்க் எனப் பெரும் நிறுவனத் தலைவர்கள்.
செய்யறிவு, காப்புரிமை, செமிகண்டக்டர் தொழில்நுட்பம் — இவற்றில் யார் மேலோங்குவார்கள் என்ற போட்டி நிலவும் நேரத்தில் இவர்கள் வந்தது பலரையும் பலவித யோசனைகளுக்கு ஆளாக்கியிருந்தது. சீனாவில் அமெரிக்க நிறுவனங்களுக்கு இடம் திறக்க வேண்டும் என்பதே டிரம்ப்பின் முதல் வேண்டுகோள் என அவர் சமூக வலைத்தளத்தில் முன்கூட்டியே அறிவித்திருந்தார்.















Add Comment