Home » கொதிக்கும் ஐரோப்பா
சுற்றுச்சூழல்

கொதிக்கும் ஐரோப்பா

வழக்கமாகக் குளிர்ச்சியான காலநிலைக்குப் பெயர்பெற்ற ஐரோப்பியக் கண்டம், தற்போது வரலாற்றில் முன்னெப்போதும் இல்லாத ஒரு பிரம்மாண்ட நெருப்பு வளையத்துக்குள் சிக்கித் தவித்துவருகிறது. 2026 மே மாதத்தின் பிற்பகுதியில் தொடங்கிய இந்த அதீத வெப்ப அலைகள், ஜூன் மாதத்தைக் கடந்து தற்போதும் ஐரோப்பாவை உலுக்கி வருகின்றன.

கடந்த 2025ஆம் ஆண்டின் கோடைக்கால அதிகபட்ச வெப்பநிலையுடன் ஒப்பிடுகையில், நடப்பாண்டில் சராசரி வெப்பநிலை ஆபத்தான முறையில் அதிகரித்துள்ளது. பாரீஸில் கடந்த 2025ஆம் ஆண்டில் சுமார் 35°C ஆக இருந்த கோடைக்கால அதிகபட்ச வெப்பநிலை, இவ்வாண்டு ஜூன் மாதத்தில் 41°C ஆக உயர்ந்துள்ளது. லண்டனில் கடந்த ஆண்டு 33°C ஆகப் பதிவான வெப்பநிலை, இந்த ஆண்டு ஜூன் மாத இறுதியில் 38°C (லிங்வுட் பகுதி) என்ற புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது.

ஐரோப்பாவை வாட்டி வதைக்கும் இந்த நீடித்த வெயிலுக்குப் பின்னால் ‘ஒமேகா பிளாக்’ என்ற விசித்திரமான வளிமண்டல அறிவியல் ஒளிந்திருக்கிறது. கிரேக்க எழுத்தான Ω வடிவத்தில் உருவாகும் இந்த உயர் அழுத்தக் காற்று மண்டலம், ஐரோப்பாவின் மேல் ஒரு பிரம்மாண்டமான பாத்திரத்தின் மூடி போல அமர்ந்து கொள்கிறது.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!