Home » ஜி.டி.என் : திரை எழுத்து அனுபவம்
வெள்ளித்திரை

ஜி.டி.என் : திரை எழுத்து அனுபவம்

ஜி.டி. நாயுடுவின் வாழ்க்கை வரலாற்றைச் சித்திரிக்கும் ஜி.டி.என் திரைப்படம் வெளியாகி, ஓடிக்கொண்டிருக்கிறது. இந்தப் படத்தின் திரைக்கதையில் பங்களித்து, வசனங்களை எழுதியிருக்கும் எழுத்தாளர் முகில் தமது அனுபவங்களை இங்கே பகிர்ந்துகொள்கிறார்:

 

வாழ்க்கை வரலாறுகளை எழுதுவதில் உள்ள சவால்கள் எனக்குப் பரிச்சயமானவை. பல புத்தகங்கள் எழுதியிருக்கிறேன். ஆனால், வாழ்க்கை வரலாற்றுத் திரைப்படத்துக்காக எழுதுவதில் இருக்கும் சவால்களை ஆழமாக, தேவைக்கும் அதிகமாக உணர்ந்துகொள்ள ஜி.டி.என் திரைப்படத்தில் பணியாற்றிய அனுபவங்கள் உதவின.

அதன் முதல் படி, ஜி.டி. நாயுடு என்ற மனிதர் குறித்து நுனி முதல் அடி வரை தெரிந்து கொள்ள முயற்சி செய்தோம். சில தெளிவற்ற விஷயங்களுக்கு விடைகள் தேடினோம். கிடைக்கும் தகவல்கள் எல்லாம் உண்மைதானா என்று சரிபார்த்துக் கொண்டோம். இந்தக் களத்துக்கான உப தகவல்களைச் சேகரித்தோம். அவர் வாழ்ந்த இடங்களில் உலவினோம். எழுத்துப் பணிக்கு உணர்வுபூர்வமாகவும் தயாராகிக் கொண்டோம்.

இரண்டாவது படி ஒன்லைன். ஆம், வாழ்க்கை வரலாறு என்றாலும் ஒன்லைன் முக்கியம். ஜி.டி. நாயுடுவின் பிறப்பு முதல் இறப்பு வரை என்று கதையை நாங்கள் ஒருபோதும் யோசிக்கவில்லை. இயக்குநர் கிருஷ்ணகுமார் எடுத்துக் கொண்ட ஒருவரிக் கதை இதுதான். நாட்டு மக்களுக்கு நல்லது செய்ய வேண்டுமென்று முனைப்போடும் கனவோடும் இயங்கிய ஒரு தொழிலதிபருக்கு, இந்த ‘சிஸ்டம்’ எப்படியெல்லாம் முட்டுக்கட்டை போட்டது, அதை எல்லாம் அவர் எப்படி உடைத்தார், தடைகளைக் கடந்து அவர் எப்படி உயர்ந்தார், மீண்டார், நிலைத்தார் என்பதுதான். இந்த வரியைச் சுற்றித்தான் திரைக்கதையைப் பின்ன முடிவெடுத்தோம்.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!