ஒரு பெயரில் ஆயிரம் நபர்கள், லட்சம் நபர்கள் இருக்கலாம். ஆனால் ஒரு பெயரைச் சொன்னால் ஒரே ஓர் உருவம் மட்டுமே மனத்தில் தோன்றும்படியாக வாழ்ந்து மறைவோர் சொற்பம். எஸ். ஜானகி மறைந்தார்.
23.04.1938 இல் ஆந்திர மாநிலம் குண்டூரில் பல்லபட்டலா என்ற கிராமத்தில் பிறந்தவர். சிஸ்டலா ஸ்ரீராம மூர்த்தி ஜானகி தன்னுடைய ஒன்பதாவது வயதில் மேடையேறி முதல் பாடலைப் பாடினார். அவருடைய குரலில் இருந்த வசீகரத்தைப் பார்த்து நகரங்களில் எதிர்காலம் இருக்கிறது என்று கருதினார் அவர் தந்தை. ஊரை விட்டுப் பிழைப்புத் தேடி வெளியேறினார்கள். முறையாக சாஸ்திரிய சங்கீதம் கற்றுக் கொள்ளவில்லை. ஆனாலும் ஒரு நாதஸ்வர வித்வானிடமிருந்து ராகங்களின் அடிப்படைகளைத் தெரிந்துகொண்டார்.
ஜானகியின் திரையுலகப் பிரவேசம் 1957 இல் நிகழ்ந்தது. முதல் படம் விதியின் விளையாட்டு. படத்தின் பெயரைப் போலவே அதில் அவர் பாடிய பாடல் பெரிதாக வரவேற்பைப் பெறவில்லை. படமும் வெளிவந்ததாகத் தெரியவில்லை. கொஞ்சும் சலங்கை படத்தில் இவர் பாடிய சிங்கார வேலனே தேவா பாடல் இவரைப் பட்டி தொட்டியெங்கும் கொண்டு சேர்த்தது. அறிமுகமான வருடத்திலேயே ஆறு மொழிப் படங்களில் பாடும் வாய்ப்புக் கிடைத்தது. அதன் பிறகு அவர் ஓய்வெடுக்கத்தான் நேரமில்லாது போனது.
















சிறப்பு