Home » செயல், செயலி, சாகசம்!
ஆளுமை

செயல், செயலி, சாகசம்!

ஹர்ஷிதா

அமெரிக்காவில் ஒய் காம்பினேட்டர் (Y Combinator) ஒரு பிரபலமான துளிர்த் தொழில் ஊக்குவிப்பு நிறுவனம் (Startup Accelerator). இதில் ஜெனரல் பார்ட்னர் என்ற உயர் பதவியை ஓர் இந்தியப் பெண் அடைந்திருக்கிறார்.

அமெரிக்க நிறுவனங்களில் இந்தியர்கள் தலைமைப் பொறுப்புகளுக்கு வருவதை நிறைய பார்த்திருக்கிறோம். இதிலென்ன ஆச்சரியம்? இவருக்கு வயது இருபத்தைந்துதான். ஒய் காம்பினேட்டர் வரலாற்றில் மிக இளம் வயது ஜெனரல் பார்ட்னர் இவர்தான். உத்தரப் பிரதேசத்தின் சஹாரன்பூரில் பிறந்து வளர்ந்த ஹர்ஷிதா அரோரா இச்சாதனையை நிகழ்த்தியது எப்படி?

அதைப் பார்ப்பதற்கு முன், ஒய் காம்பினேட்டர் பற்றிய ஒரு சுருக்கமான அறிமுகம். சிலிக்கான் வேலியில் துளிர்த் தொழில்களில் முதலீடு செய்யும் துணிகர நிதி நிறுவனங்கள் (Venture Capital) அதிகம். இவற்றுள் ஒய் காம்பினேட்டர் தனித்துவமானது. இவர்கள் முதலீடு மட்டும் செய்வதில்லை. தொழில்முனைவோரை ஒரு தொகுதியாக (பேட்ச்) தேர்ந்தெடுக்கிறார்கள். ஆரம்பக்கட்ட முதலீடு செய்வதுடன், நிறுவனத்தை வேகமாக வளர்ப்பதற்கும் வழிகாட்டுகிறார்கள். கூடுதல் முதலீடுகளைப் பெறவும் உதவுகிறார்கள்.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!