சில கதைகள் வெறும் வாழ்க்கை வரலாறு மட்டுமல்ல — அவை நம்பிக்கையின் ஆதாரங்கள். டாக்டர் ஆனந்த் மெகாலிங்கம் என்ற பெயர் இன்று இந்தியாவின் தனியார் விண்வெளி உலகில் விண்மீனாகப் பிரகாசமாக ஒளிர்கிறது. ஆனால் அந்த ஒளிக்குப் பின்னால் இருக்கும் இருட்டை அறிந்தால், அந்த வெளிச்சம் இன்னும் ஆழமாகப் புரியும்.
தமிழ்நாட்டின் ஒரு சின்னக் கிராமத்தில் வறுமையான குடும்பப் பின்னணியில் பிறந்தார் ஆனந்த். தந்தை டிராக்டர் ஓட்டுநர். சிறுவயதில் அரசுப் பள்ளியில் தினமும் ஆறு கிலோமீட்டர் நடந்தே பள்ளிக்குச் சென்று பயின்றார். நிலையான வாழ்க்கை வேண்டும் என்று கணினி அறிவியல் படித்தார்.
எண்பதுகளில் கல்லூரிக்குச் சென்ற பலரையும் போல கணினித் தொழில்நுட்பம் படித்தால் வேலை கிடைக்கும் என அதையே பொறியியல் துறையில் தேர்ந்தெடுத்தார். ஆனால் அதில் மனத்தை ஒருமுகப்படுத்த இயலவில்லை. குறைவான மதிப்பெண்களே கிடைத்தன. ஒருகட்டத்தில் கல்லூரியை இடைநிறுத்தினார். பலர் அதைத் தோல்வி என்று சொன்னார்கள்.















Add Comment