கனிகாவுக்கு இருபத்தொரு வயதில் ரத்தப் புற்றுநோய் கண்டறியப்படுகிறது. மருத்துவர்கள் சில மாதங்களே மீதம் என்கிறார்கள். எட்டு மாதங்கள் கதிரியக்கச் சிகிச்சை நடக்கிறது.
ஆனால் மரணத்துக்கு முன் அவர் மனத்தில் இருந்தது ஒரு கனவு. அதன் விதைகள் ஐந்து வயதில் அருகில் பார்த்த ஒரு ஹெலிகாப்டர்; ஏழு வயதில் செய்த ஒரு விமானப் பயணம். பறவையின் இறக்கைகள் ஆழ் படிமமாய் அக்குழந்தையுள் தங்கிவிட்டன.
வசதியான குடும்பம் என்றாலும் அதன் பெண்களின் நிலையில் உவப்பில்லை. மார்வாரி குடும்பத்தில் பிறந்ததால் இளம் வயதில் கல்யாணம், பிள்ளைகள். பின்னர் கணவருக்குத் தொழிலில், கணக்கு வழக்கில் ஒத்தாசை. இது எதையும் அவர் செய்யப் போவதில்லை என்று முடிவு செய்தார். நான் பணி செய்யப் போவது விண்ணில் மட்டுமே என்று அவருடைய உள்ளுணர்வு சொன்னது. தந்தையின் மறுப்புச் சொல் அவரிடம் எடுபடவில்லை. ஆனால் புற்றுநோய் தனது கனவை விரைந்து செலுத்தப் போவது அவருக்குத் தெரியாது.
















Add Comment