Home » இரான் – அமெரிக்கா: மீண்டும் மோதல்; எதுதான் முடிவு?
உலகம்

இரான் – அமெரிக்கா: மீண்டும் மோதல்; எதுதான் முடிவு?

கடந்த ஜூலை 7ஆம் தேதியன்று இரானிலுள்ள எண்பதுக்கும் மேற்பட்ட ராணுவத்தளங்களை அமெரிக்கா தாக்கியது. பந்தர் அப்பாஸ், புஷேர் மற்றும் இரானின் முக்கிய எண்ணெய் ஏற்றுமதி முனையமான கார்க் தீவுக்கு அருகிலுள்ள தளங்கள் தாக்கப்பட்டன. ஹோர்மூஸ் நீர்வழிப்பாதை வழியாகச் சென்ற மூன்று வணிகக் கப்பல்களை இரான் தாக்கியதற்குப் பதிலடியாக இத்தாக்குதலை நடத்தியதாக அமெரிக்கத் தரப்பு விளக்கமளித்திருக்கிறது. தாக்குதல்கள் தொடர்ந்தால் கார்க் தீவை நேரடியாகத் தாக்குவோம் என்று டிரம்ப் வெளிப்படையாக அச்சுறுத்தியுள்ளது போர்ப் பதற்றத்தை மேலும் அதிகரித்துள்ளது.

அமெரிக்கத் தாக்குதலுக்குப் பதிலளிக்கும் வகையில், பஹ்ரைனிலும் குவைத்திலும் அமைந்துள்ள அமெரிக்கத் தளங்களை இரான் தாக்கியிருக்கிறது. எண்ணெய் வர்த்தகம் ஓரளவு கட்டுக்குள் வந்திருக்கும் நிலையில், இப்பிரச்சனை மீண்டும் கிளைவிட்டிருக்கிறது. மூன்று வாரங்களுக்கு முன்பு இரானுடன் கையெழுத்திட்ட இடைக்காலப் போர்நிறுத்த ஒப்பந்தத்தை முடித்துக் கொள்வதாகவும் டிரம்ப் அறிவித்துள்ளார்.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!