நமது கண்கள் ஓர் அற்புதக் கண்ணாடி. அவற்றின் வெளிப்புறப் படலம் ‘கார்னியா’ (Cornea). விழி வெண்படலம் எனப்படும். இது வெளிச்சத்தைக் குவிக்கிறது. கண்ணுக்குள் வெளிச்சத்தைச் செலுத்துகிறது. வெளியே ஓர் ஆடியாகவும் செயல்படுகிறது.
வழக்கமாக இப்படலம் பந்து போல் உருண்டையாக இருக்கும். சிலருக்கு இந்த அமைப்பு மெல்ல மெலிதாகும். பின்னர் கூம்பு (Cone) வடிவில் முன்நோக்கிப் பிதுங்கும். இந்தப் பாதிப்பு மருத்துவ உலகில் ‘கெரட்டாகானூஸ்’ (Keratoconus) என அழைக்கப்படுகிறது.
அண்மையில் இந்நோய் குறித்த விழிப்புணர்வு உலகளவில் அதிகரித்துள்ளது. அமெரிக்கா, இங்கிலாந்து, தென் கொரியா, இந்தியா ஆகிய நாடுகளில் முக்கிய ஆராய்ச்சிகள் நடந்துள்ளன. அவை அதிர்ச்சி தரும் தகவல்களை வெளிப்படுத்தியுள்ளன.















Add Comment