அமெரிக்காவில் ஒரு விஷயம் எல்லை மீறிப் போகும்போது உணவு மற்றும் மருந்துக் கட்டுப்பாடு மையம் விழித்துக்கொள்ளும். உடனே அதைக் கட்டுக்குள் கொண்டுவர, ஆராய்ச்சிக்குப் பல கோடி நிதி ஒதுக்கப்படும்.
அப்படித்தான், பதின்ம வயதினர் முதல் முதியோர்கள் வரை எடை அதிகரிப்பால் அவதிப்பட்டனர். ஏதோ கண்மூடித் திறக்கும் நேரத்தில் அமெரிக்க மக்கள் பலர் எடை அதிகரித்து விட்டது போல விவாதங்கள் சூடு பறந்தன. விமானங்களில் பயணிகள் சீட்டை விஸ்தரிப்பதா, மூன்று பேர் அமரும் இருக்கைகளில் பெருத்த உடலுடன் ஒருவர் வந்தால் என்ன செய்வது, விமானத்தின் எடை அதிகமானால் என்ன செய்வது எனத் துறை நிபுணர்கள் விவாதித்தனர்.
இதற்காக, பலவகையான உணவுக் கட்டுப்பாட்டுப் பயிற்சிகள், மனநலன் மற்றும் மூளையைக் கட்டுப்படுத்தும் பயிற்சிகள், உடற்பயிற்சிகள் என்று ஊடகங்கள் ஊக்குவித்தன. நிறுவனங்களில் உணவு இடைவேளையில் நடப்பது, பல இலவசப் பயிற்சிகள் தருவது எனப் பல சலுகைகள் தரப்பட்டன. விளம்பரங்கள் முதல் உணவுப் பொருள்கள், குடிக்கும் பானங்கள் எல்லாவற்றிலும் அந்த ஒழுங்கும் நேர்த்தியும் அதிகரித்தன.















Add Comment