Home » நகர வாழ்க்கை

Tag - நகர வாழ்க்கை

மெட்ரோ கதைகள்

வசதியும் வாக்குவாதமும்

மெட்ரோவுக்குப் படிக்கட்டுகள் கிடையாது. நடைமேடையிலிருந்து பெட்டிக்குள் முட்டி வலிக்க ஏறிச் செல்ல வேண்டாம். எட்டி ஓரடி எடுத்து வைத்தாலே போதும். நடைமேடை இடைவெளிகளும் மிகக் குறுகியவை. சுரங்கப் பாதை நிலையங்களில் தண்டவாளங்களின் இருபுறமும் பாதுகாப்புக்காகக் கதவுகள் போட்டிருப்பார்கள். இப்படி ஏராளமான...

Read More
மெட்ரோ கதைகள்

உயிரோட்டம்

மெட்ரோ பயணம் என்றவுடன் முதலில் நினைவுக்கு வருவது சொகுசு. கட்டணம் சற்று கூடுதல் என்றாலும் விமான நிலையத்தில் இருப்பது போன்ற சொகுசை அங்கு அனுபவிக்கலாம். பெட்டிக்குள்ளும் நிலையத்திலும் தண்ணென்ற குளிர்ச்சி. ஏறி இறங்குவதற்குத் தோதாக எஸ்கலேட்டர், விசாலமான மின்தூக்கிகள். பளபளப்பான டைல்ஸ் தரை. பாதுகாப்புப்...

Read More
மெட்ரோ கதைகள்

மகராசன்

மழை நாள்களில் மெட்ரோ ரயில் பயணம் ஒரு வரம்தான். ஜன்னல் வழியாக சாரல் அடிக்காது. சட்டை நனையாது. ஓட்டைப் பேருந்துகள்போல உள்ளே ஒழுகாது. ஏசி குழாயிலிருந்து எப்போதாவது தண்ணீர் சொட்டும் என்பது வேறு விஷயம். ஆனால் நனைந்தவர்கள் மழையின் ஈரத்தை உள்ளே கொண்டு செல்வதைத் தவிர்க்க முடியாது. எல்லா நிலையங்களிலும்...

Read More
மெட்ரோ கதைகள்

அனுபவம் என்னும் ஆடி

மெட்ரோ நிலையங்களில் நடைமேடைகளும் பளிச்சென்று இருக்கும். கூட்டம் அதிகம் இருந்தாலும் இரைச்சல் இருக்காது. சுற்றிலும் கண்காணிப்புக் கருவிகள் பொருத்தப்பட்டிருக்கும். ஆண், பெண் எனக் குறைந்தது இரண்டு ஊழியர்கள் நடைபாதையை மேற்பார்வை செய்வார்கள். சுரங்கப்பாதை நிலையங்களில் தண்டவாளத்துக்கு இருபுறமும் கறுப்புக்...

Read More
மெட்ரோ கதைகள்

இரும்புச் சங்கிலி

மெட்ரோவில் பைகளைக் கீழே வைக்க வேண்டிய அவசியம் இல்லை. இருக்கைக்கு மேலே ஒரு கண்ணாடிப் பலகை இருக்கும்.  வாயைக் கட்டாத கட்டைப் பையைக்கூடத் துணிந்து மேலே வைக்கலாம். ரயில் அலுங்காமல் குலுங்காமல் செல்வதால் கீழே விழும் சாத்தியங்கள் குறைவு. ஆனாலும் அந்தக் கண்ணாடிப் பலகையில் யாரும் பைகளை வைப்பது கிடையாது. ...

Read More
மெட்ரோ கதைகள்

தேவ வனம்

மெட்ரோ ரயில் பெட்டிகள் கறுப்புக் கண்ணாடிகளால் மூடப்பட்டவை.  மூச்சு முட்டும் அளவு இறுக்கம் கொண்டவை. அந்த இறுக்கத்தைத் தளர்த்தும் வல்லமை குழந்தைகளுக்கு மட்டுமே உண்டு. குறிப்பாக, முதல்முறை மெட்ரோவில் பயணம் செய்யும் சிறுவர்கள். ‘அடுத்த நிறுத்தம் ஆலந்தூர், இடதுபுறம் உள்ள கதவுகள் திறக்கும்’...

Read More
மெட்ரோ கதைகள்

வெள்ளையும் கறுப்பும்

சென்னை மெட்ரோ ரயில் திட்டம் 2009ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது . அப்போது மெட்ரோ ரயிலுக்குச் சிவப்பு கறுப்பு வண்ணங்கள் தேர்வு செய்யப்பட்டிருந்தன. பின்னர் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தின் காரணமாக அது நீலமும் கறுப்புமாக மாறியது. இறுதியாக CMRL (சென்னை மெட்ரோ ரயில் லிமிdeட்) லோகோவைத் தொடர்புறுத்தும் விதமாகவும்...

Read More
மெட்ரோ கதைகள்

தயக்கத் திரை

மெட்ரோவுக்குள் தனித் தீவாக இருப்பவர்கள் இளம் தலைமுறையினர். குழுவாக வருபவர்கள் தங்களுக்குள் பேசிச் சிரித்துக் கொள்வார்கள். தனியாகப் பயணிப்பவர்கள் காதுகளில் வண்ண வண்ணமான கவச குண்டலங்களை அணிந்து கொண்டிருப்பார்கள். கண்கள் கறுப்புத் திரையில் நிலைத்திருக்கும். சோகம், ஆச்சரியம், குறுநகை எனத் திரையில்...

Read More
மெட்ராஸ் பேப்பர்

உவப்பத் தலைக் கூடல்

மெட்ரோ பெட்டிகள் அமைதியானவை. அவரவர் உலகத்தில் பயணியர் மூழ்கி இருப்பார்கள். தெரிந்தவர்களுடன் மட்டும் பேசிக் கொள்வார்கள். ஒரு பார்வைக்கு துக்க வீடு போன்ற தோற்றத்தைக் கொண்டிருக்கும். அப்படி இருப்பதில் சில நன்மைகளும் உண்டு. சிறு ஓசைகளைக் கூடத் தெளிவாகக் கேட்க முடியும். சிறு சிறு விஷயங்களில் சிதறல்...

Read More
மெட்ரோ கதைகள்

அழியாச்சுடர்

ஒரு பெருமழைக் காலம். மெட்ரோ ரயில் அத்தனை வெறுமையாக இருந்தது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களிலெல்லாம் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை. அரசு அலுவலகங்களும் இயங்கவில்லை. தனியார் ஊழியர்கள் வீட்டிலிருந்தே பணி செய்ய அறிவுறுத்தப்பட்டனர். அரசு விடுமுறை எல்லைக்குள் வராமல், வீட்டில் இருந்தே...

Read More

இந்த இதழில்

error: Content is protected !!