மெட்ரோவை ஒரு சொகுசுத் திரையரங்கம் என்று சொல்லலாம். மத்திய வர்க்கம் முதல் உயர்தட்டு மக்கள் வரை, இளைஞர்கள் முதல் இணையர்கள் வரை விரும்பி வரும் ஓர் இடம். பெட்டிக்குப் பெட்டி வண்ணத் திரையும் உண்டு. தினமும் அதில் அம்புக்குறி நகரும் ஒரே படம்தான்.
திரைப்படங்களில் வருவதுபோன்ற நவீன ஃபேஷனை மெட்ரோவிலும் தினசரி பார்க்கலாம். முட்டை வடிவ ஓட்டையில் தோள்பட்டை எட்டிப் பார்க்கும் குட்டிச் சட்டை. பாவாடையா, பேண்ட்டா என்று பிரித்தறிய முடியாத பலாஸோ. முட்டிக்கு மேலும் முழங்காலிலும் ஜன்னல் வைத்த ஜீன்ஸ். டென்னிஸ் வீராங்கனை அணிவது போன்ற குட்டைப் பாவாடை.
உடைகளில் மட்டும் அல்ல, தலையில் ஆங்காங்கே தீப்பிடித்ததைப் போன்ற சிவப்புச் சாயம், நீலம், பச்சை வண்ணங்களில் பயமுறுத்தும் கான்டாக்ட் லென்ஸ், ரத்தச் சிவப்பேறி நீளநீளமாய் வளர்ந்த பேய் நகங்கள், கருங்காலி பிரேஸ்லெட், யானைக் காலுக்குப் போடுவது போன்ற பெரிய வெள்ளை ஷூ என நூற்றுக்கணக்கான அலங்காரங்களையும் அணிகலன்களையும் அறிமுகம் செய்து கொள்ளலாம்.
















Add Comment