சென்னை மெட்ரோ நிர்வாகம் சமூக வலைத்தளங்களில் ஒரு கேள்வியைக் கேட்டிருந்தது. ‘ஒவ்வொரு பயணிக்கும் ஒரு விருப்பம் உண்டு; ஒவ்வொரு பயணத்துக்கும் ஒரு கனவு உண்டு!’ ‘மெட்ரோ ரயிலுக்காக ஒரு வரம் கேட்கும் வாய்ப்பு கிடைத்தால் நீங்கள் என்ன கேட்பீர்கள்?’ அன்றாடம் செல்லும் கட்டாயப் பயணங்களில்...
Tag - மெட்ரோ கதைகள்
8 A.M. Metro என்றொரு இந்தித் திரைப்படம். அதில் நாயகிக்கு ரயில் பயணம் என்றால் பயம். தனியாக ரயிலில் செல்வதை அறவே தவிர்த்து விடுவாள். அப்படிப்பட்டவளுக்குத் தினமும் மெட்ரோவில் சென்று வர வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. கலக்கத்துடன் நிலையத்துக்கு வருவாள். இதயம் தடதடவென அடித்துக் கொள்ளும். நெற்றியில்...
மெட்ரோவுக்குள் ஒருவரையொருவர் அறிமுகம் செய்து கொள்வது கிடையாது. ஆனாலும் தினமும் ஒரே நேரத்தில் பயணிப்பவர்களுக்கு நடுவே ஒரு மௌன அறிமுகம் நிகழ்ந்து விடுகிறது. பெயர் தெரியாமலேயே முகம் மட்டும் பரிச்சயமாகத் தெரியும். நிற்கும் தோரணை, அணியும் உடைகள், அணிகலன்கள், பேசும் நபர்களைக் கொண்டு இயல்பாக ஓர்...
மெட்ரோவை ஒரு சொகுசுத் திரையரங்கம் என்று சொல்லலாம். மத்திய வர்க்கம் முதல் உயர்தட்டு மக்கள் வரை, இளைஞர்கள் முதல் இணையர்கள் வரை விரும்பி வரும் ஓர் இடம். பெட்டிக்குப் பெட்டி வண்ணத் திரையும் உண்டு. தினமும் அதில் அம்புக்குறி நகரும் ஒரே படம்தான். திரைப்படங்களில் வருவதுபோன்ற நவீன ஃபேஷனை மெட்ரோவிலும்...
மெட்ரோவுக்குப் படிக்கட்டுகள் கிடையாது. நடைமேடையிலிருந்து பெட்டிக்குள் முட்டி வலிக்க ஏறிச் செல்ல வேண்டாம். எட்டி ஓரடி எடுத்து வைத்தாலே போதும். நடைமேடை இடைவெளிகளும் மிகக் குறுகியவை. சுரங்கப் பாதை நிலையங்களில் தண்டவாளங்களின் இருபுறமும் பாதுகாப்புக்காகக் கதவுகள் போட்டிருப்பார்கள். இப்படி ஏராளமான...
மெட்ரோ பயணம் என்றவுடன் முதலில் நினைவுக்கு வருவது சொகுசு. கட்டணம் சற்று கூடுதல் என்றாலும் விமான நிலையத்தில் இருப்பது போன்ற சொகுசை அங்கு அனுபவிக்கலாம். பெட்டிக்குள்ளும் நிலையத்திலும் தண்ணென்ற குளிர்ச்சி. ஏறி இறங்குவதற்குத் தோதாக எஸ்கலேட்டர், விசாலமான மின்தூக்கிகள். பளபளப்பான டைல்ஸ் தரை. பாதுகாப்புப்...
மழை நாள்களில் மெட்ரோ ரயில் பயணம் ஒரு வரம்தான். ஜன்னல் வழியாக சாரல் அடிக்காது. சட்டை நனையாது. ஓட்டைப் பேருந்துகள்போல உள்ளே ஒழுகாது. ஏசி குழாயிலிருந்து எப்போதாவது தண்ணீர் சொட்டும் என்பது வேறு விஷயம். ஆனால் நனைந்தவர்கள் மழையின் ஈரத்தை உள்ளே கொண்டு செல்வதைத் தவிர்க்க முடியாது. எல்லா நிலையங்களிலும்...
மெட்ரோ நிலையங்களில் நடைமேடைகளும் பளிச்சென்று இருக்கும். கூட்டம் அதிகம் இருந்தாலும் இரைச்சல் இருக்காது. சுற்றிலும் கண்காணிப்புக் கருவிகள் பொருத்தப்பட்டிருக்கும். ஆண், பெண் எனக் குறைந்தது இரண்டு ஊழியர்கள் நடைபாதையை மேற்பார்வை செய்வார்கள். சுரங்கப்பாதை நிலையங்களில் தண்டவாளத்துக்கு இருபுறமும் கறுப்புக்...
மெட்ரோவில் பைகளைக் கீழே வைக்க வேண்டிய அவசியம் இல்லை. இருக்கைக்கு மேலே ஒரு கண்ணாடிப் பலகை இருக்கும். வாயைக் கட்டாத கட்டைப் பையைக்கூடத் துணிந்து மேலே வைக்கலாம். ரயில் அலுங்காமல் குலுங்காமல் செல்வதால் கீழே விழும் சாத்தியங்கள் குறைவு. ஆனாலும் அந்தக் கண்ணாடிப் பலகையில் யாரும் பைகளை வைப்பது கிடையாது. ...
மெட்ரோ ரயில் பெட்டிகள் கறுப்புக் கண்ணாடிகளால் மூடப்பட்டவை. மூச்சு முட்டும் அளவு இறுக்கம் கொண்டவை. அந்த இறுக்கத்தைத் தளர்த்தும் வல்லமை குழந்தைகளுக்கு மட்டுமே உண்டு. குறிப்பாக, முதல்முறை மெட்ரோவில் பயணம் செய்யும் சிறுவர்கள். ‘அடுத்த நிறுத்தம் ஆலந்தூர், இடதுபுறம் உள்ள கதவுகள் திறக்கும்’...














