Home » அணியில் திகழ்வது
மெட்ரோ கதைகள்

அணியில் திகழ்வது

மெட்ரோவுக்குள் ஒருவரையொருவர் அறிமுகம் செய்து கொள்வது கிடையாது. ஆனாலும் தினமும் ஒரே நேரத்தில் பயணிப்பவர்களுக்கு நடுவே ஒரு மௌன அறிமுகம் நிகழ்ந்து விடுகிறது. பெயர் தெரியாமலேயே முகம் மட்டும் பரிச்சயமாகத் தெரியும். நிற்கும் தோரணை, அணியும் உடைகள், அணிகலன்கள், பேசும் நபர்களைக் கொண்டு இயல்பாக ஓர் அடையாளமும் உருவாகி விடும்.

அப்படி இயல்பாகத் தம் பக்கம் கவனத்தை இழுத்துக் கொண்ட தம்பதி அவர்கள். புதிதாகத் திருமணமானவர்கள். மகளிர்ப் பெட்டி முடியும் இடத்தில் இவள் நின்று கொள்வாள். பொதுப்பெட்டியின் எல்லை தொடங்கும் இடத்தில் கணவன். இரண்டு பெட்டிகளும் இணையும் இடம் பெட்டியின் அகலத்தைக் காட்டிலும் குறுகலாக இருக்கும். சாய்ந்து நிற்பதற்குத் தோதாக இல்லாமல், சுவர்கள் அரைவட்டமாக வளைந்திருக்கும். மேலே பிடித்துக் கொள்வதற்குக் கைப்பிடிகள் இருக்காது. கீழே இணைப்புத் தகடுகளின் மேல் நின்றால் ஊஞ்சல் பலகையில் நிற்பதுபோல முன்னும் பின்னும் ஆடிக் கொண்டே இருக்கும்.  அவ்வப்போது உராய்ந்து பல்லைக் கூசச் செய்யும் ஓசையை எழுப்பும்.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!