1686ஆம் ஆண்டு. முகலாய மன்னர் ஔரங்கசீப், வடக்கு கர்நாடகத்தில் அமைந்துள்ள பீஜப்பூரைக் கைப்பற்றினார். சில நாட்களில் ஹைதராபாத்தின் கோல்கொண்டா கோட்டையையும் தன்வசமாக்கினார்.
அக்காலகட்டத்தில் மதராசப்பட்டினம் கிழக்கிந்திய கம்பெனியின் பிரதான வணிகக் கேந்திரமாக விளங்கியது. அதன் இயக்குநர் ஜோசையா சைல்டு, ஔரங்கசீப் அடுத்ததாகக் கடற்கரைப் பகுதியான மதராசப்பட்டினத்தை நோக்கி வரக்கூடும் என்று சுதாரித்துக் கொண்டார். பிரிட்டனில் இருந்த மன்னர் இரண்டாம் ஜேம்சுக்கு அவசரச் செய்தியொன்றை அனுப்பினார். மதராசபட்டினத்தை ஔரங்கசீப்பிடம் இழந்துவிடக் கூடாது, அதேசமயம் அந்நகரை முறையாக நிர்வகிக்க வேண்டும் என்று அதில் குறிப்பிட்டிருந்தார்.
அதற்கடுத்து நிகழ்ந்த தொடர் நிர்வாக மாற்றங்களின் காரணமாக, 1688 செப்டம்பர் 29 அன்று மெட்ராஸ் மாநகராட்சி நிறுவப்பட்டது. மக்களுக்கு அடிப்படை வசதிகளை ஏற்படுத்தித் தருவதும் வரி வசூலிப்பதும் மாநகராட்சியின் பிரதான நோக்கமாக இருந்தது. இவை தவிர நீதிமன்றங்களையும் நிர்வகித்து வந்தது. மெட்ராஸ் மாகாணத்தின் முதல் மேயராக நத்தானியேல் ஹிக்கின்சன் பதவியேற்றார். அவரோடு பன்னிரண்டு நகர்மன்ற உறுப்பினர்களும் பதவியேற்றுக் கொண்டனர்.















Add Comment