இமயமலையில் உள்ள பனிப்பாறைகள் கடந்த காலத்தைவிடத் தற்போது அறுபத்தைந்து சதவீதம் வேகமாக உருகி வருவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இதே நிலை நீடித்தால், இன்னும் சில ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவில் என்னென்ன விளைவுகள் ஏற்படும்? அது நம் பொருளாதாரத்தை எந்த அளவு பாதிப்புக்குள்ளாக்கும்?
மேற்கில் சிந்து பள்ளத்தாக்கிலிருந்து கிழக்கே பிரம்மபுத்திரா பள்ளத்தாக்கு வரை சுமார் 2,500 கி.மீ நீளத்திற்கு இமயமலைத் தொடர் நீண்டு பரவியுள்ளது. இது உலகிலுள்ள பதினான்கு உயரமான சிகரங்களில் எவரெஸ்ட் உள்பட ஒன்பது சிகரங்களைத் தன்னகத்தே கொண்டுள்ளது.
இதன் பனிப்பாறைகளிலிருந்தே சிந்து, கங்கை, பிரம்மபுத்திரா போன்ற வட இந்தியாவின் முதன்மையான ஆறுகள் உருவாகின்றன. இந்த நீரமைப்பைச் சார்ந்து வாழும் சுமார் இருபத்து நான்கு கோடி மக்களுக்கு இவை நன்னீரை வழங்குகின்றன.















Add Comment