Home » நேபாளத் துயரம்: இயற்கை ஆடிய கோரத் தாண்டவம்
இயற்கை

நேபாளத் துயரம்: இயற்கை ஆடிய கோரத் தாண்டவம்

நேபாளின் ரசுவா மாவட்டத்தில், புதன்கிழமை காலை எப்போதும் போலவே விடிந்தது. பள்ளிகள், கல்லூரிகள், பிற அலுவல்களுக்குச் செல்வோர் வழக்கமான பயணத்தில் இருந்தனர். சந்தைகள் உள்ளிட்ட பொது இடங்களிலும் மக்கள் கூட்டம் அதிகமிருந்தது. தாங்கள் எப்படியான பேராபத்தைச் சந்திக்க இருக்கிறோம் என அங்கு எவரும் அறிந்திருக்கவில்லை.

காலை ஒன்பது மணிக்கு அது நடந்தது. சற்று நேரத்துக்கு முன் அமைதியுடன் ஓடிக் கொண்டிருந்த ‘போதே கோஷி’ ஆறு திடீரெனச் சமுத்திரமாக மாறி, பேரலையாக எழுந்து மொத்த ஊரையும் போர்த்தி மூடியது.

மிகச் சில நிமிடங்களில், ரசுவாவின் பல பகுதிகள் எலும்புக் கூடுகளாக மாறின. அங்கிருந்த நூற்றுக்கணக்கானவர்கள் மாயமாகியிருந்தனர். தப்பித்த பிறராலும் நிம்மதியாக இருக்க முடியவில்லை. தங்களுக்கு நெருக்கமானவர்களை இழந்த சோகத்தில் கதறித் துடித்தனர். கட்டடங்கள், பாலங்கள், வாகனங்கள் என அனைத்தையும் வழித்துச் சென்றிருந்தது அந்தப் பெருவெள்ளம்.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!