Home » துளையிட்டு வெல்வோம்!
உலகம்

துளையிட்டு வெல்வோம்!

ஆப்பிரிக்காவின் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள நாடு சோமாலியா. ஆப்பிரிக்காவின் கொம்பு என்று அழைக்கப்படும் பகுதியில் இந்நாடு அமைந்துள்ளது. இந்தியப் பெருங்கடல், அரபிக் கடல், ஏடன் வளைகுடா போன்றவற்றை உள்ளடக்கி, சுமார் 3,333 கிலோமீட்டருக்கு மிக நீண்ட கடலோரம் கொண்ட நாடு.

வடக்கே. எத்தியோப்பியா, ஜிபௌட்டி, வடமேற்கே கென்யா ஆகிய நாடுகளுடன் எல்லையைப் பகிர்ந்துகொள்கிறது. தலைநகர் மொகதிஷு. 19ஆம் நூற்றாண்டில் பிரிட்டன் வடக்கு சோமாலியாவையும், இத்தாலி தெற்கு சோமாலியாவையும் தங்கள் காலனிகளாக ஆட்சி செய்தன. 1960இல் இரு பகுதிகளும் இணைந்து சுதந்தர சோமாலியா உருவானது. தற்போது சோமாலியா ஒரு கூட்டாட்சிக் குடியரசாகச் செயல்படுகிறது.

பசி, பட்டினிக்காக அறியப்பட்ட நாடு சோமாலியா.1990களில் சோமாலியாவில் பஞ்சம் ஏற்பட்டபோது எலும்பும் தோலுமாகக் காணப்பட்ட அந்நாட்டுக் குழந்தைகளின் புகைப்படங்கள் உலக நாளிதழ்களின் முதல் பக்கங்களில் இடம் பிடித்தன. ஒரு குழந்தை தரையில் அமர்ந்திருக்க, அதன் பின்னால் ஒரு பிணந்தின்னிக் கழுகு காத்திருக்கும் படம் அது. அமெரிக்கப் புகைப்படக் கலைஞர் கெவின் கார்ட்டர் எடுத்த அந்தப் புகைப்படம் புலிட்சர் பரிசு வென்றது. ‘அரசியல் அறிஞர்கள் உருவாக்கிய தோல்வியுற்ற நாடு’ என்று கோட்பாட்டுக்கு உதாரணமாக விளங்கியது சோமாலியா.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!