191. ஜார்ஜ் ஃபெர்னாண்டஸ்
உத்தரப் பிரதேசம் அமேதி நகரத்தின் பிரதான மார்க்கெட்டில் ஜனதாக் கூட்டணி வேட்பாளருக்கு ஆதரவாக வாக்கு சேகரித்தபோது ‘அமேதியில் ஜனதாதான் ஜெயிக்கும்’ என்று ஒரு கடைக்காரர் கூறினார். அதற்கு ஜன சங்கம் கட்சியின் எல்.கே.அத்வானி, ‘ஆனால் எல்லாக் கடைக்காரர்களும் காங்கிரஸ் கொடியைத்தானே கட்டி வைத்திருக்கிறீர்கள்?’ என்று கேட்டார்.
‘ஐயா! நீங்கள் கொடியை மட்டும் பார்க்கிறீர்கள். ஆனால், அது கட்டப்பட்டுள்ளது ஒரு கட்டையில் என்பதைக் கவனிக்கவில்லையா? நாங்கள் அந்த கட்டைக்குப் பயந்துதான் அதிலே (காங்கிரஸ்) கொடியைக் கட்டி வைத்திருக்கிறோம்’ என்று பதில் சொன்னார் கடைக்காரர்.
பொதுவாக, எதிர்க்கட்சியினர் இந்திரா காந்தியின் ஜனநாயகப் படுகொலை, பேச்சுரிமை பறிப்பு, எதிர்க்கட்சித் தலைவர்களைச் சிறையில் அடைத்தது, கட்டாயக் கருத்தடைக் கொடூரங்கள், ஆக்கிரமிப்பு அகற்றல் என்ற பெயரில் நடந்த அத்துமீறல்கள், சஞ்சய் காந்தி ஆடிய ஆட்டம் போன்ற விஷயங்களைப் பற்றி விரிவாகவும் அழுத்தமாகவும் பேசிப் பிரசாரம் செய்தார்கள்.















Add Comment