Home » ஒரு குடும்பக் கதை – 220
குடும்பக் கதை • தொடர்கள்

ஒரு குடும்பக் கதை – 220

220. ஆபரேஷன் புளூ ஸ்டார்

உண்மையில், பொற்கோவில் வளாகத்துக்கு உள்ளே என்ன நடக்கிறது? பிந்த்ரன்வாலேவின் கட்டுப்பாட்டில் எவ்வளவு தீவிரவாதிகள் இருக்கிறார்கள்? அவர்கள் பொற்கோவில் வளாகத்தில் எங்கெங்கே இருக்கிறார்கள்? அவர்கள் வசம் உள்ள ஆயுதங்கள் என்ன? அவர்களுடைய நவீன ஆயுதங்களைப் பயன்படுத்தும் திறன் என்ன? என்பதெல்லாம் முன்கூட்டியே ரகசியப் புலனாய்வு செய்யப்படவில்லை.

புளூ ஸ்டார் ஆபரேஷன் மூலமாகச் சீக்கியர்களின் புனிதத் தலமான பொற்கோவிலுக்குள்ளே சுலபமாக நுழைந்து, மிக எளிதாக பிந்த்ரன்வாலேவை வீழ்த்திவிடலாம் என்று இந்திய ராணுவம் தப்புக் கணக்கு போட்டுவிட்டது.

இந்திய ராணுவத்தைக் கண்டதும், ‘உயிர் பிழைத்தால் போதும்’ என்று பிந்த்ரன்வாலே சரணடைந்துவிடுவார் என்று சில ராணுவ உயர் அதிகாரிகள் சொன்னார்கள்.

ஜூன் 5ஆம் தேதி.

மாலை சுமார் நான்கு மணியளவில், இந்திய ராணுவம் பொற்கோவில் வளாகத்துக்கு உள்ளே இருக்கும் சாமானிய மக்களை உடனடியாக வெளியேறும்படி கோரிக்கை விடுத்தது.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!