Home » பொய்யோடு விளையாடு – 11
தொடர்கள் பொய்யோடு விளையாடு

பொய்யோடு விளையாடு – 11

தவளை தன் வாயால் கெடும்

பொய் என்றாலே அது வாயால் சொல்லப்படும் வார்த்தைகள் என்ற எண்ணம் மக்களுக்கு ஏற்படுவது இயல்பு. ஆனால் பொய், பெரும்பாலும் உடலின் அசைவுகளாலேயே சொல்லப்படுகிறது. இதுவரை இந்தத் தொடரைப் படித்தவர்கள் இதை உணர்ந்திருப்பீர்கள். இந்தப் பகுதியில், பொய் காட்டும் தடயமாக வாய் எவ்வாறு செயல்படுகிறது என்பதைக் காணப்போகிறோம். வாயிலிருந்து வரும் வார்த்தைகளைக் கொண்டு அல்ல. வாயின் அசைவுகளைக்கொண்டு பொய்யறியப் போகிறோம்.

பொய்யர்கள் பொதுவாகப் பயன்படுத்தும் இரண்டு உத்திகள் உண்டு. ஒன்று, வாயை மறைத்துக்கொள்வது. மற்றொன்று, வாயை இறுக்கமாக மூடிக்கொள்வது. பொய்யர்களின் நனவிலி மனம் (Subconscious mind) பொய் வெளிவந்த பாதையையே அதாவது, மூலத்தையே மறைத்துக்கொள்ள முனைகிறது. அதன் விளைவுதான் இது போன்ற உடல்மொழிகள் என்கிறது உளவியல்.

குழந்தைகள் ஏதேனும் சொல்லக்கூடாததைச் சொல்லிவிட்டால் இரண்டு கைகளாலும் வாயைப் பொத்திக்கொள்வதைப் பார்த்திருப்போம். இது ஒரு மிகைப்படுத்தப்பட்ட, நாடகத்தனமான சைகைதான். இருந்தாலும், பொய் சொன்ன வாயை மறைத்துக்கொள்ள முனையும் செயல்பாட்டை இச்செய்கை உணர்த்துகிறது.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!