மூன்று வெற்றுத்தாள்கள்
1990.
செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகர சபை.
வலோத்யாவை அனதோலி சப்ஜக் அழைத்திருந்தார். அவரிடம் வலோத்யா தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டார்.
‘நான் உனது பல்கலைக்கழகச் சர்வதேச உறவுகள் துறையின் தலைவரிடம் பேசிவிடுகிறேன். நீ திங்கள் முதல் எனக்குத் உதவியாளராக வந்துவிடு. உன் பணிமாற்றத்தை நான் கவனித்துக் கொள்கிறேன்’ என்றார் சப்ஜக்.
வலோத்யா அவரிடம் உண்மையைச் சொன்னார். ‘எனக்கும் இதில் விருப்பமே. நான் பல்கலைக்கழகத்தில் மட்டும் வேலை செய்திருந்தால் இது சாத்தியமாகியிருக்கும். ஆனால் நான் கேஜிபியால் இங்கு அனுப்பப்பட்டிருக்கிறேன்’ என்றார்.
சப்ஜக் நீண்ட நேரம் யோசித்தார். பிறகு ‘சரி, இரண்டையும் விட்டுவிடு. உண்மையைச் சொல்வதானால் எனக்குக் கட்டாயமாக உதவியாளர் தேவை. இங்கிருக்கும் யாரையும் என்னால் நம்ப முடியவில்லை’ என்றார். ஒரு பேராசிரியர், சட்டத்துறையில் முனைவர் பட்டம் பெற்ற மேதை, அப்போதைய நகர சபையின் தலைவரான சப்ஜக், அவ்வளவு வெளிப்படையாகப் பேசியது வலோத்யாவுக்கு ஆச்சரியமாக இருந்தது.















Add Comment