206. அற்ப ஆயுள் ஆட்சி
சரண் சிங்கின் அமைச்சரவையில் இடம்பெற்ற ஒய்.பி. சவான், துணைப் பிரதமர் பொறுப்புடன் உள்துறை அமைச்சராகவும் இருந்தார். பகுகுணா நிதி அமைச்சர், சி.சுப்ரமணியம் பாதுகாப்பு அமைச்சர்.
சரண் சிங்குக்குத் தமிழ்நாட்டில் அப்போது ஆட்சி செய்த எம்.ஜி.ஆரின் கட்சியான அ.தி.மு.கவும் ஆதரவு அளித்தது. எனவே சத்தியவாணி முத்து, பாலா பழனூர் என்ற இரண்டு அ.தி.மு.கவினரும் மத்திய அமைச்சர்கள் ஆனார்கள். சத்தியவாணி முத்துவுக்குச் சமூக நலன், பாலா பழனூருக்கு பெட்ரோலியம், ரசாயனம் மற்றும் உர அமைச்சகம்.
தான் ஆசைப்பட்டது நிறைவேறிவிட்டது என்று முழுமையாகப் புரிந்துகொண்டு அதன் மகிழ்ச்சியை அனுபவித்தார் சரண் சிங். ஆனால் தான் பதவியில் இருப்பது இந்திரா காந்தியின் தயவில் என்பதை அவ்வப்போது மறந்து, இந்திரா காந்தியை விமர்சனம் செய்தார். ஆதரவளிப்பதற்கு அவர் போட்ட முக்கியமான திரைமறைவு நிபந்தனையைக் கூட அவர் மறந்துவிட்டார்.















Add Comment