69 ஸ்டென் கன்
ஸ்மார்ட் என்று சுந்தர ராமசாமியே சொல்லிவிட்டார் என்று இறுமாந்திருந்த நம்மை ஒரு ஆரஞ்சு பானம், இப்படி அடித்து வீழ்த்திவிட்டதே. கோல்ட் ஸ்பாட் என்கிற பெயர்கூடப் பதியாத அளவுக்கு அவ்வளவு மக்காகவா இருந்துகொண்டிருக்கிறோம்.
ஸ்மார்ட் என்கிற பேச்சு ராம் வீட்டில் இவர்கள் மட்டுமே இருந்தபோது வந்தது. சிவரூபன் கொடுத்து, தான் பிறந்த ஜூனுக்கான ஜெமினியை மட்டும் நான்கைந்து முறை திரும்பத்திரும்பப் படித்திருந்த லிண்டா குட்மனின் சன் சைன் என்கிற புத்தகம்தான் அந்தப் பேச்சு வரவே காரணமாய் இருந்தது. அதைப் படித்திருக்கிறீர்களா என்று கேட்டவன், மே மாதக் கடைசியில் பிறந்தவர் என்பதால் ராமசாமியும் ஜெமினிதான் என்றான். படித்திருப்பதாய் மெல்லிய முறுவலில் தெரிவித்தார். கூடவே தேதியும் வருடமும் குழம்பிக் கிடக்கின்றன; தாம் பிறந்த தேதி வருடம் இரண்டில் ஒன்று 30 மற்றது 31. எது பிறந்த தேதி எது பிறந்த வருடம் என்பதில்தான் குழப்பம் என்றார்.
















Add Comment