68 ஒழுங்கு
நேற்று மாலை தாஜ்மகாலில் எழுதிய கடிதத்தை இன்று விடியற்காலை மதுராவில் தபாலில் சேர்த்தேன். இந்தக் கடிதத்தை இப்போது எழுதுவேன் என்று ஒரு மணிநேரம் முன்புகூட நினைக்கவில்லை. வயிறு சரியில்லாத காரணத்தால் மதிய உணவு உட்கொள்ளவில்லை. சரி, டீ குடிக்கலாம் என்று வெளியில் சென்றேன். இப்போது தங்களுக்குக் கடிதம் எழுதத் தொடங்கியுள்ளேன்.
யு.பி.யிலிருந்து தில்லி செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் கிளைக்கும் சாலையில் நுழைந்ததும் இந்தச் சிற்றூர் வருகிறது. நாங்கள் தங்கியுள்ள கல்யாண மண்டபத்தையொட்டி எதிரும் புதிருமாக நிறைய கடைகள், சைக்கிள் கடை, சவரக் கடை, டீக்கடை, மளிகைக் கடை. பெரிய வித்தியாசமொன்றுமில்லை.















Add Comment