76 வெறுமை
ஜோடோ பாரத். பாரத் மதாகீ ஜெய் என்று உற்சாகமாகக் கோஷமிட்டபடி சைக்கிள்கள் மைதானத்திற்குள் நுழைந்தன. இறுதியை எட்டிவிட்டோம் என்பதே உற்சாகத்திற்கான உண்மையான காரணமாக இருக்கவேண்டும்.
கன்யாகுமரியில் புறப்பட்டது முதல் அதுவரை கட்டுக்கோப்பாக ஓட்டிக்கொண்டு வந்தவர்கள் சைக்கிள்களை அப்படி அப்படியே நிறுத்திவிட்டுக் குதிப்பதும் ஒருவரையொருவர் கட்டிக்கொள்வதும் சிரிப்பதும் அழுவதுமாகக் கலவையான உணர்ச்சிகளில் திக்குமுக்காடிக்கொண்டிருந்தனர்.















Add Comment