75 போர்க்களம்
ஜாலியன்வாலா பாக், அங்கிருந்து ரொம்பப் பக்கம் என்பதைக் கேள்விப்பட்டதும் இருப்புக்கொள்ளவில்லை. பொற்கோவிலிலிருந்து கிளம்பி துர்கைக் கோவிலில்தான் அன்றைய தங்கல் என்று வேறு, ஒரு செய்தி உலவிக்கொண்டிருந்தது. சீக்கியர்களுக்கு ஒரு நாள் இந்துக்களுக்கு ஒரு நாள் என்று சமன் படுத்துகிறார்களோ எனத் தோன்றிற்று.
துர்கைக் கோவிலுக்கு டேரா தூக்குவதற்குள் ஜாலியன்வாலா பாக்கைப் பார்த்துவிட்டு வந்துவிடவேண்டும் என்று பரபரத்தது. கேட்கலாமா வேண்டாமா என்று கொஞ்சம் தயக்கமாக இருந்தது. இரண்டு நாளில் ரேலியே முடியப்போகிறது என்ன தலையா போய்விடப்போகிறது என ஒருபுறம் இருந்தாலும் சொல்லிவிட்டுப் போவதே சரியெனப் பட்டது.
புதுச்சேரி வ உ சி உயர்நிலைப் பள்ளியில் படிக்கையில் பிரம்பால் விளாசித் தள்ளிப் பின் இவன் தோளில் கைபோட்டுக்கொண்டு நடக்குமளவுக்கு நெருக்கமான தலைமையசிரியர் ஜான் லூயி, ‘உன்னையெல்லாம் அடிச்சித் திருத்த முடியாது. உனக்கா தோணனும்‘ என்று சொன்னது நினைவுக்கு வந்து முறுவலிக்கவைத்தது.
















Add Comment