டிசம்பர் 3, 2024, தென்கொரியா. இரவு 10:30 மணி. தேசியத் தொலைக்காட்சியில் அதிபர் யூன் சுக் தோன்றினார். ‘எனதன்புக் குடிமக்களே, கனத்த இதயத்துடன் இச்செய்தியை அறிவிக்கிறேன். நம் நாடாளுமன்றம் குற்றவாளிகளின் கூடாரமாக மாறியுள்ளது. ஜனநாயகக் கட்சி (Democratic party) அரசுக்கு எதிராகச் செயல்பட்டு வருகிறது. வட கொரிய கம்யூனிஸ்ட் சக்திகளுடன் இணைந்து சதிவேலைகளில் ஈடுபட்டு வருகிறது. அரசியலமைப்பைப் பாதுகாக்கவும், மக்களின் நலனைக் கருத்தில் கொண்டும் அவசரக்கால ராணுவச் சட்டத்தை இன்று முதல் அறிவிக்கிறேன்’ என்றார்.
இந்த அறிவிப்பைத் தொடர்ந்து எதிர்க்கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கைது செய்ய உத்தரவிட்டார். தலைநகரம் சியோலிலுள்ள நாடாளுமன்ற வளாகம் ராணுவக் கட்டுப்பாட்டின் கீழ் வந்தது. இருநூறுக்கும் அதிகமான ராணுவத் துருப்புக்கள் நாடாளுமன்ற வளாகத்தில் நிறுத்தப்பட்டனர். இந்தச் செய்தியைக் கேட்டு பொதுமக்கள் வெகுண்டெழுந்து நாடாளுமன்ற வளாகத்தில் திரண்டனர். எதிர்க்கட்சி உறுப்பினர்களும் ஒன்று கூடினர். அதிபர் யூனின் அரசாணையை எதிர்த்துப் போராட்டம் நடத்தினர்.
உச்ச நீதிமன்றம் ராணுவச் சட்டத்தை அரசியலமைப்புக்கு விரோதமானது என்று அறிவித்தது. அறிவித்த ஆறு மணிநேரத்துக்குள் அதிபர் யூன் ராணுவ சட்டத்தைத் திரும்பப் பெற்றார். சில வாரங்களில் அதிபர் யூன் பதவி நீக்கம் செய்யப்பட்டார்.















Add Comment