சுற்றுச்சூழல் ஆர்வலர் திம்மக்கா தனது நூற்றுப் பதினான்காவது வயதில் காலமானார். தனது வாழ்நாளில் சுமார் எட்டாயிரத்துக்கு மேற்பட்ட மரங்களை நட்டவர் திம்மக்கா. கன்றுகளை நட்டதோடு கடமை முடிந்துவிட்டதாக எண்ணாமல் குழந்தைகள்போல அவற்றைப் பேணி வளர்த்திருக்கிறார். வீட்டுக் கொல்லையில் காய், கனிகளைத் தரும்...
Tag - சுற்றுச்சூழல்
சுமார் 9,45,000 சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்ட தான்சானியா, ஆப்ரிக்காவின் மிகப்பெரிய நாடுகளில் ஒன்று. 1961இல் சுதந்திரம் பெற்றது, பின்னர் 1962இல் குடியரசாக மாறியது. 1964இல் டாங்கன்யிகா மற்றும் சான்சிபார் ஆகிய பகுதிகள் ஒன்றிணைந்ததன் மூலம் முழு இறையாண்மை கொண்ட நாடாக உருவானது. இந்நாட்டின் பரப்பளவு...
சிங்கப்பூரின் நான்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகம் (NTU), வடகிழக்கு ஆசிய நாடுகளின் கடல்மட்ட உயர்வைக் குறித்த ஆய்வறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. கடல்மட்ட உயர்வின் காரணமாகப் பல ஆசிய நகரங்கள் மூழ்கி வருவதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. காலநிலை மாற்றத்தால் கடல் மட்டத்தின் உயரம் அதிகரிப்பதாக...
சிங்கப்பூரின் தேசிய வளர்ச்சித் துறை அமைச்சகம், அந்நாட்டின் கிழக்குக் கடற்கரைப் பகுதியில் 800 ஹெக்டேர் பரப்பளவில் கடலை தூர்த்து, நிலத்தை உருவாக்கும் திட்டத்தைச் செயல்படுத்தவுள்ளது. அதன் மீது மூன்று தனித் தீவுகளும் கட்டமைக்கப்படவுள்ளன. ‘புராஜெக்ட் லாங் ஐலேண்ட்’ என்பது இத்திட்டத்தின்...
கடலோரப் பகுதிகளில் மாசு அதிகரிக்கிறது என்பதற்காக அங்கே குடியிருக்கும் மக்களை இடம் மாற்றச் சொல்கிறது அரசு. காலம் காலமாக வாழ்ந்து வரும் நிலத்தைக் காலிசெய்ய முடியாது என்று மக்கள் அடம்பிடிக்கிறார்கள். மறுத்தால் லட்சக்கணக்கில் அபராதம் கட்டவேண்டும் என்கிறது அரசு. முன்னோர்கள் காலத்திலிருந்து அங்கே வாழ்ந்த...
நீலகிரிக்கும் கொடைக்கானலுக்கும் செல்லும் சுற்றுலாப் பயணிகளுக்கு, இந்த ஆண்டும் இ-பாஸ் நடைமுறையை அமல்படுத்தியுள்ளது தமிழக அரசு. சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுப்படி, கோடை விடுமுறைக் காலத்தில் மட்டும் இந்த நடைமுறை இருக்கிறது. 2025 ஏப்ரல் முதல் ஜூன் வரை செயலில் இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது...
சென்னை துறைமுகத்துக்குச் சமீபத்தில் ஒரு கப்பல் வந்தது. துறைமுகமென்றால் கப்பல் வராமல் கட்டை வண்டியா வரும்? இதெல்லாம் ஒரு விஷயமா என்றால், வந்தது எந்தக் கப்பல், அதன் நோக்கம் என்ன என்பதில் உள்ளது விஷயம். அந்தக் கப்பலின் பெயர், பிளாஸ்டிக் ஒடிசி. உலகம் சுற்றும் கப்பல். ஆனால் சும்மா சுற்றும் கப்பல் அல்ல...
ஏரிகளுக்கும் படகு வீடுகளுக்கும் புகழ்பெற்ற காஷ்மீர் பள்ளத்தாக்கு வறட்சியை எதிர்கொள்கிறது. ஜம்மு காஷ்மீர் முதல்வர் ஓமர் அப்துல்லா, அரசின் நீர் மேலாண்மைத் துறையான ஜல் ஷக்தி எடுக்கும் நடவடிக்கைகள் போதாது என்றும் மக்களும் இணைந்து செயல்படவேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். திடீரென நீர் நெருக்கடியை...
துணி துவைப்பதற்குப் போகும் நேரத்தை விட, சலவை இயந்திரத்தினுள் தொலைந்து போன ஒற்றைக் காலுறையைத் தேடுவதற்கு அதிக நேரம் செலவாகும். அது கடைசி வரை கிடைக்காமலே போகவும் வாய்ப்புண்டு. எதற்காக சாக்ஸையெல்லாம் மெஷினில் போட வேண்டும். கையால் அலசினால் கை தேய்ந்தா போய்விடும் என்பார்கள், பெரியவர்கள். ஆனால்...
பெரும்பாலான தென்னாப்பிரிக்க நாடுகள் மழையை மட்டுமே விவசாயத்திற்கு நம்பியிருப்பன. ஒவ்வொரு வருடமும் குறைந்து கொண்டே வந்த மழை, இந்த ஆண்டு வரவே இல்லை. வரலாறு காணாத வறட்சியை அறிவித்திருக்கின்றன மூன்றில் ஒரு பங்கு தென்னாப்பிரிக்க நாடுகள். இயற்கைக்குத் துரோகம் செய்பவை என்னவோ, நவீனத் தொழில்நுட்ப வளர்ச்சி...












