114. இரண்டு சீடர்கள்
நீராடி வந்ததும் நீறணிவது என் வழக்கம். உங்கள் இருப்பிடத்தில் அது இருக்கிறதாவெனக் கேட்கத் தயக்கமாக உள்ளது,
என்று பாரதாய தத்தன் சொன்னான். சார்வாகன் சிறிது யோசித்துவிட்டு, நீறுதானே. வேண்டுமென்று நீ நினைப்பது நியாயமென்றால் எங்கேனும் கிடக்கும். தேடிப் பார்.
சார்வாகன் வேண்டுமென்றே சிறிது உரத்த குரலில் இதனைச் சொன்னான். தத்தன் சற்று வியப்படைந்து, உங்கள் குடிசையில் திருநீறெப்படி இருக்க முடியும் என்று கேட்டான்.
நீ சிவ பக்தன். நீராடினால் உனக்கு நீறு வேண்டும். என்னைப் பார். இந்தச் சங்கடங்கள் நேரம் கொல்லும் என்பதனால் நான் அடிக்கடி நீராடுவதே இல்லை,
என்று சொல்லிவிட்டுச் சார்வாகன் சிரித்தான். அவனது எண்ணம், அவனருகே அவனையன்றி இன்னொருவன் அறிய இயலாத வகையில் அமர்ந்திருந்த சித்தருக்கும் பிறருக்கும் விளங்கியது. தத்தனுக்கு அவன் பேசியது முற்றிலும் விளங்கவில்லை. தயக்கத்துடனே சுற்றுமுற்றும் பார்த்தான். சார்வாகனின் குடிநீர்க் கலயத்துக்கு அருகே ஓர் ஆலஞ்சருகு மடிந்து கிடந்ததைக் கண்டு, ஐயத்துடன் எழுந்து சென்று எடுத்துப் பார்த்தான். அதில் திருநீறு இருந்தது.















Add Comment