09. ஏழரை பிளஸ் ஒன்
மால்வேர்கள் ஒட்டுண்ணிகள். அதாவது அவை நம் சிஸ்டத்தில் இருக்கும் ஃபைல் ஒன்றைத் தாக்கும். அதை உறிஞ்சி வாழும். இது பொதுவான மால்வேர் விதி.
இந்த விதிக்கு உட்படாத மால்வேர்களும் உண்டு. அப்படியான ஒரு மால்வேரைத்தான் இந்த அத்தியாயத்தில் அறிமுகப்படுத்திக் கொள்ள இருக்கிறோம்.
இவர்தான் மால்வேர் குடும்பத்தின் உசைன் போல்ட். அத்தனை வேகம். பெயர் எஸ் க்யூ எல் ஸ்லாமர் 2003. SQL Slammer 2003.
இவருக்கு இன்னும் ஒரு பெயரும் உண்டு. நீலக்கல். Sapphire. நீலக்கல் என்னும் பெயர் நன்றாகத்தான் இருக்கிறது. ஆயினும் ஸ்லாமர் என்னும் பெயர்தான் சைபர் வல்லுநர்களால் விரும்பப்பட்டது. அவர்களுடைய டிசைன் அப்படி.
















Add Comment