நரேந்திர மோடி இன்ஸ்டாகிராமில் நூறு மில்லியன் ஃபாலோயர்களைக் கொண்டுள்ளார். இதுவரை இரண்டு இந்தியர்களே இந்த நூறு மில்லியன் மைல்கல்லைத் தொட்டிருக்கிறார்கள். முதலில் இந்த மைல்கல்லை எட்டிப்பிடித்தவர் விராட் கோஹ்லி.
நூறு மில்லியன் என்பது எத்தனை பெரியது?
இது பல நாடுகளின் மொத்த மக்கள்தொகையை விட அதிகம். இதை இன்னொரு விதத்திலும் சொல்லிப் பார்க்கலாம். இவர்களது ஃபாலோயர்களை வைத்து ஒரு தேசத்தை உருவாக்கினால், அத்தேசம் அதிக மக்கள் தொகை கொண்ட நாடுகளில் முதல் இருபது இடங்களுக்குள் வரும்.
இவர்கள் போடும் ஒவ்வொரு போஸ்ட்டும் எந்தவொரு பிரைம் டிவி சேனலை விடவும் அதிகம் பேரைச் சென்றடையும். ஒரு ரீலின் பார்வையாளர் எண்ணிக்கை, செய்தி சேனல்களின் நேயர்களை விடக் கூடுதலாக இருக்கும். இவர்கள் பதிவிடும் ஒரு ஸ்டோரியைப் பார்ப்பவர்களுடன் ஒப்பிட்டால், ஒரு நாளின் செய்தித்தாள் விற்பனையே குறைவாகத்தான் இருக்கும்.















Add Comment