முனீஸ்வரன்
நள்ளிரவில் அலகாட்சியம்மாவும் அவளது கணவனும் அலங்காநல்லூர் கிராம எல்லைக்கு ஓலைப்பெட்டியுடன் வந்தார்கள். அலங்காட்சியம்மா ஓலைப்பெட்டியைத் திறந்தாள். ஒரு சுருட்டுப் புகை போல மெலிதாகக் கிளம்பி உயரே எழும்பியது முனியாண்டி. புகை உயரமாக விரிந்தது. மனித ரூபத்துக்கு வந்தது. அலங்காட்சி பிரமிப்பாகப் பார்த்துக் கொண்டிருந்தாள். அவளுடைய கணவன் பயந்து போயிருந்தான்.
முனியாண்டிக்கு இந்த இடம் திருப்தியாக இருந்தது. அங்கேயே தங்க முடிவு செய்துவிட்டான். பிறந்தது முதல் அலைக்கழிக்கப்பட்ட முனியாண்டிக்கு இப்போதுதான் நிரந்தரமாக ஓரிடம் கிடைத்துள்ளது.
முனி ஒரு மலைநாட்டுச் சிற்றரசனின் மகனாகப் பிறந்தான். அரசனின் மகன் இளவரசன் போலத்தான் ஆரம்பத்தில் வளர்ந்தான். அந்த மலை, மந்திரத் தந்திர பூமி. மந்திரவாதிகளின் புகலிடம். அது போன்ற ஒருவரை அவன் சந்திக்க நேர்ந்தது. அவர் நல்லவர். அவர் அவனுக்கு மந்திரங்கள் கற்றுக் கொடுத்தார். பில்லி, சூனியம், ஏவல்களை விரட்டுவதையும் அவற்றைச் சக்தியிழக்கச் செய்வதையும் கற்றுக் கொடுத்தார்.















Add Comment