Home » அழகென்ற சொல்லுக்கு ஆப்பிள் – 24
அழகென்ற சொல்லுக்கு ஆப்பிள் தொடர்கள்

அழகென்ற சொல்லுக்கு ஆப்பிள் – 24

ஜப்பானில் ஜாப்ஸ்

லிசா அறிமுக விழா. ஜாப்ஸை அழைக்காமல் இருக்க முடியுமா? அவர்தான் நிறுவனத்தின் தலைவர். லிசா குழுவுக்கும் அவருக்கும் இருந்த பஞ்சாயத்துகள் ஒருபுறம். ஆனாலும் ஜாப்ஸைத் தவிர வேறெவரால் சிறப்பாக அறிமுகப்படுத்த முடியும்?

பல்வேறு பத்திரிகை நிறுவனங்களையும் அழைத்திருந்தனர். அழகிய மலர்களுக்கு நடுவே லிசா. லிசா கம்ப்யூட்டர் என்னவெல்லாம் செய்யும் என்று தனக்கே உரிய ஸ்டைலில் சொல்லிக்கொண்டிருந்தார் ஜாப்ஸ்.

இந்த அறிமுகத்துக்கு அவரை அழைத்து வருவதற்கு முன் ஒரு கோரிக்கை விடுத்திருந்தனர். மேக் கம்ப்யூட்டர்கள் குறித்துப் பேசக் கூடாது. அவ்வாறு செய்தால் லிசாவின் மீதான கவனம் சிதறும்.

மேக் ஜாப்ஸின் கனவு. அதெப்படிப் பேசாமல் இருப்பார்? அடுத்த நாள் வெளிவந்த அனைத்துப் பத்திரிகைகளும் மேக் பற்றி எழுதியிருந்தன.

‘இன்னும் ஒரு வருடத்தில் சிறப்பான மேக் கம்ப்யூட்டர் வந்துவிடும். விலையும் குறைவு’ என்று ஃபார்ச்சூன் செய்தி வெளியிட்டிருந்தது.

லிசாவின் விலை அதிகம். இதைவிட நல்ல கம்ப்யூட்டர் வருகிறது என்று ஜாப்ஸே சொல்கிறார். பிறகெப்படி பயனர்கள் லிசாவுக்கு ஆதரவு தருவார்கள்? தரவில்லை.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!