“முயற்சியைக் கைவிடாதீர்கள். நல்லவர்கள் எதுவும் செய்யாமல் இருப்பதே, தீமை வெல்வதற்குப் போதுமானதாகிறது. அதனால்தான் சொல்கிறேன், செயல்படாமல் இருந்து விடாதீர்கள். என்னைக் கொல்ல முடிவு செய்கிறார்கள் என்றால், நாம் அந்த அளவிற்கு சக்தி வாய்ந்தவர்கள் என்று பொருள். தவறு செய்பவர்களால் ஒடுக்கப்படும்...
Author - வினுலா
![]()
விளைநிலத்தை உழும் டிராக்டர்கள், ஐரோப்பாவின் முக்கிய நெடுஞ்சாலைகளை நிறைத்திருக்கிறது. மண்ணைத் தளர்த்தி, விதையிடத் தயாரிப்பதே உழுதல். சட்டங்களைத் தளர்த்த, ஆட்சியாளர்களைத் தயாரிக்கவே நிறுத்தப்பட்டுள்ளன இந்த டிராக்டர்கள். விவசாயம், விவசாய இனம், இரண்டும் நீடித்திருக்கவே ஐரோப்பிய விவசாயிகள்...
18 – சோசியலிசமா ஜனநாயகமா? போரிஸ் நிக்கோலாயவிச் எல்ஸின் (1991-1999), மக்களால் சுதந்திரமாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் அதிபர். ஆயிரம் ஆண்டு ரஷ்ய வரலாற்றில் உருவான முதல் மக்கள் தலைவர். உரல் மலைத்தொடரின் ஒரு கிராமத்தில் பிறந்த, அடக்குமுறைக்கு அடங்காத புரட்சியாளர். இரண்டு தலைமுறைகளாக அவரது குடும்பம்...
17 – இரண்டாவது சுதந்திரம் 18 – ஆகஸ்ட், 1991 கர்பச்சோவின் ஓய்வு இல்லம் கிரீமியா. அரசாங்க உயரதிகாரிகள் நால்வர் அழைப்பின்றி கர்பச்சோவைச் சந்திக்க வந்தனர். இரண்டு கையெழுத்துகளை மட்டும் கோரினர். ஒன்று நாட்டில் அவசர நிலையைப் பிரகடனம் செய்வதற்கு. மற்றொன்று துணை அதிபர் கெனாடி எனாயெவ் பெயருக்கு...
16 – சுவரால் தகர்ந்த நம்பிக்கை நாள்: 9 – நவ – 1989. இடம்: கிழக்கு ஜெர்மனி. நிகழ்ச்சி: குண்டெர் ஷபாவ்ஸ்கியின் செய்தியாளர் சந்திப்பு. “பெர்லின் சுவரின் அனைத்து சோதனைச் சாவடிகள் வழியாகவும், கிழக்கு மற்றும் மேற்கு ஜெர்மனிக்கிடையே நிரந்தரமாக இடம்பெயர்ந்துக் கொள்ளலாம்.” என்று...
15 – கட்டவிழ்ந்த சமூகம் மன்னராட்சிக்குப் பிறகு, எழுபதாண்டுகள் கடந்திருந்தன. இனி சோவியத்தின் கட்டமைப்பில் திருத்தங்கள் செய்து பயனில்லை. முழுவதுமாக மாற்றியெழுத வேண்டும் என்பதில் உறுதியுடன் இருந்தார் கர்பச்சோவ். அத்தனை எளிதாகச் செய்துவிட முடியுமா…? எப்படி இருந்தது சோவியத்தின் கட்டமைப்பு? கம்யூனிசக்...
சிவப்புநிறக் கிரீடங்களில் நாளைய ராஜா ராணிகள் பெருமிதத்தோடு வலம் வந்து கொண்டிருந்தனர். காகிதக் கிரீடமென்பதால் ராஜாவுக்கும், ராணிக்கும் வித்தியாசமில்லா கிரீடம் சாத்தியமானது. காகிதத்தில் எழுத்துகளைத் தாங்கிய புத்தகங்களும் இதை நடைமுறையில் கொணரும் வலிமைபெற்றவை. ஒருவேளை இதுவும் ஒரு குறியீடோ என்ற...
14 – பேரழிவு கற்றுத்தந்த பாடம் நிலையான ஆட்சி என்பதே சோவியத்தின் உடனடித் தேவையானது. நாட்டின் தேக்க நிலையைச் சரிசெய்யுமளவு, இறந்துபோன குறுகியகால அதிபர்களுக்கு நேரமிருக்கவில்லை. நல்ல வேளையாக இப்பதவிக்குப் பொருத்தமானவர், ஏற்கெனவே செயல்படத் தொடங்கியிருந்தார். மிகைல் செர்கேயவிச் கர்பச்சோவ் (1985-1991)...
13 – தேக்கநிலையும் அதிருப்தியும் உண்மையை மக்களிடமிருந்து இம்முறை ஒளிக்க முடியவில்லை. தொலைத்தொடர்பு சாதனங்கள் சோவியத் மக்களுக்கு வெளியுலகை அறிமுகப்படுத்தின. தங்களின் வாழ்க்கைத் தரத்தை, பிறநாட்டு மக்களோடு ஒப்பிட்டுப் பார்த்து அதிர்ச்சியடைந்தனர். அறியாமை கொடுத்த பேரின்பங்களிலிருந்து மக்கள் மீளத்...
12 – விண்வெளியில் கைகுலுக்கிய வல்லரசுகள் ஜூன் 1973. வெள்ளை மாளிகை, வாஷிங்டன். அமெரிக்க அதிபர் ரிச்சர்ட் நிக்சனும், சோவியத் அதிபர் லியனிட் ப்ரியெஸ்னிவும் அருகருகே அமர்ந்திருக்கிறார்கள். இருவரின் கையெழுத்துகளுக்காக பல ஆவணங்கள் மேஜை மேல் காத்துக் கொண்டிருந்தன. திடீரென ப்ரியெஸ்னிவ் தனது பேனாவால் ஒரு...














