224. என்.டி.ஆரின் விஸ்வரூபம்
காங்கிரஸ் கட்சி மாநில நலன்களைப் புறக்கணிப்பதும், அதனால் அதிருப்தியடைந்த அம்மாநில மக்கள் காங்கிரஸுக்கு மாற்றாக வாக்களிக்க ஒரு கட்சியை எதிர்பார்ப்பதும் புதிதாக மாநிலக் கட்சிகள் உருவாக வழிசெய்தன.
இன்னொரு பக்கம், காங்கிரஸ் கட்சியின் கோஷ்டிப் பூசல்கள், புறக்கணிப்புகள் காரணமாக மாநில அளவில் காங்கிரஸ் கட்சி பிளவுபட்டு புதிய கட்சிகள் உருவாக அடித்தளமிட்டன.
என்.டி.ஆர். முந்தைய ரகம் என்றால் மம்தா பானர்ஜி பிந்தைய ரகம்.
ஜாதிக் கணக்குகள் போட்டு முதலமைச்சர் நாற்காலியில் அமர்த்தப்பட்ட பவனம் வெங்கடசாமி ரெட்டி ஆறு மாதங்களுக்கும் சற்று அதிகமாக முதல்வர் பதவி வகித்தார், அவ்வளவுதான்!
ஆந்திராவில் மீண்டும் ஒரு முதலமைச்சர் மாற்றம் நடந்தேறியது. 1982 செப்டம்பரில் கோட்லா விஜயபாஸ்கர ரெட்டி முதலமைச்சர் ஆக்கப்பட்டார்.
















Add Comment