நிற்க வைத்துக் கேள்வி கேளுங்கள்
நமது சொல்லுக்கும் அது தொடர்பான சைகைக்கும் இடையே டைமிங் என்ற ஒன்று உண்டல்லவா? அந்த டைமிங்கைத் தவறவிடுவது பொய்யருடைய பெரும் பிரச்சினைகளுள் ஒன்று. உண்மையைச் சொல்பவர் பேசுவதற்கு முன்போ அல்லது பேசும்போதோ தலையை அதற்கு இசைவாக அசைப்பார். அந்த அசைவு ஆமோதிப்பாகவோ மறுப்பாகவோ இருக்கலாம்.
எப்படியாகினும் அது அவர் பேசும் கருத்துடன் இசைந்து நிற்கும். அதுவே வார்த்தைகளை வெளியிட்ட பிறகு, அதற்கு இசைவாகத் தலையை அசைப்பது பொய்யரின் செய்கை. அதில் இயந்திரத்தனத்தைக் காணலாம். கை கால் அசைவுகளிலும் இந்த இயந்திரத்தனத்தைக் காணலாம்.
மனத்தில் எழும் எண்ணங்களும் அந்த எண்ணங்களை வெளிப்படுத்தும் வார்த்தைகளும் அவ்வார்த்தைகளுக்கு இசைவான சைகைகளும் ஒரு தாளலயத்தில் நிகழ்கின்றன. அவற்றுக்கிடையே தன்னிச்சையான ரிதம் இருப்பதைக் காணலாம். அடுத்த முறை உங்கள் நண்பர் உங்களிடம் பேசும்போது, அந்த ரிதத்தைக் காண முடிகிறதா எனச் சோதித்துப் பாருங்கள். இது போன்ற ரிதத்தைப் போலி செய்வது கடினம். நடிப்பில் அவ்வளவு பயிற்சியற்ற நடிகர்கள் நடித்த காட்சிகளைப் பார்ப்பது இவ்விஷயத்தில் பயனுள்ளதாக இருக்கும். ரிதம் குலையும்போது இயந்திரத்தன்மை வெளிப்படுவதைக் காணலாம்.
















Add Comment