பொதுவாக இரு நாடுகளுக்கு இடையே எல்லைக் கோடு என்பது எப்படி இருக்கும்? எவ்வளவு வளைந்து நெளிந்து போனாலும் கோட்டுக்கு இந்தப் பக்கம் ஒரு நாடு, கோட்டுக்கு அந்தப் பக்கம் இன்னொரு நாடு என்று பிரிக்கும் வகையில் இருக்கும் அல்லவா? ஆனால் நெதர்லாந்து மற்றும் பெல்ஜியம் நாடுகளைப் பிரிக்கும் சர்வதேச எல்லைக் கோடு ஓரிடத்தில் எந்த ஒழுங்கிலும் அடங்காமல் அடம் பிடிக்கிறது.
எவ்விதக் கட்டுப்பாடுமின்றி, கண்களை மூடிக் கொண்டு வரைந்தது போல் எல்லைக் கோடுகள் அங்கே அமைந்துள்ளன. காண்பவர்க்கு இது ஒருசேர வியப்பையும் திகைப்பையும், கூடவே குதூகலத்தையும் ஏற்படுத்தும். இத்தனை உணர்வுகளையும் அனுபவிக்கும் வாய்ப்பு அண்மையில் மேற்கொண்ட ஐரோப்பியப் பயணத்தில் கிட்டியது.
நெதர்லாந்து தலைநகரம் ஆம்ஸ்டர்டாமிலிருந்து 124 கிமீ தெற்கு நோக்கிச் சென்றால் பெல்ஜியம் நாட்டின் வட எல்லையைச் சந்திக்கும் இடத்தில் இருக்கிறது பார்லெ நாசவ் (Baarle Nassau), பார்லெ ஹெர்டோக் (Baarle Hertog) என்ற ஒரு சிற்றூர். வாயில் நுழையாத இரு பெயர்களைச் சொல்லிவிட்டு ஒரு சிற்றூர் என்று சொல்வது சற்று குழப்புகிறதா?
















Add Comment