கடந்த ஆகஸ்ட் 26ஆம் தேதி நேபாள-சீன எல்லையில் நிகழ்ந்த பெரும் பனிப்பாறைச் சரிவில் சுமார் ஆயிரம் பேர் இறந்துள்ளனர். ஐயாயிரத்துக்கும் மேற்பட்டோர் காணாமல் போயுள்ளனர்.
இமயமலைத் தொடரில் உருவாகியிருந்த மிகப் பெரிய உறைப் பனிப்பாறை உருகி, மணிக்கு ஏறக்குறைய 170 கிமீ வேகத்தில் சுமார் நான்காயிரம் அடி உயரத்திலிருந்து கீழே விழுந்ததால் பெருவெள்ளம் ஏற்பட்டது. இதனால் நேபாளத்தின் வடக்கு மற்றும் மத்தியப் பகுதிகள் மிகப் பெரும் சேதத்தைச் சந்தித்துள்ளன.
இந்த வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட திரிசூலி நதிக்கரையோரம் இருந்த பல நேபாள கிராமங்கள் முற்றிலும் அழிந்துவிட்டன. நேபாள-சீன எல்லைப்பகுதியில் இருந்த குடியுரிமைச் சரிபார்ப்பு அலுவலகத்தைச் சுமார் முன்னூறு அடி உயரத்துக்குச் சீறி வந்த நீரும் சேறும் பாறைகளும் தரைமட்டமாக்கிவிட்டன.















Add Comment