வெற்றிடம் எனும் சொல் வெற்றி எனத் தொடங்குகிறது. பல நேரங்களில் வெற்றிடமே வெற்றிக்கு இட்டுச் செல்லும் பாதையாக அமைந்துவிடுகிறது.
ஆப்பிள் நிறுவனத்திலும் ஒரு வெற்றிடம் ஏற்பட்டது. ஸ்டீவ் ஜாப்ஸ் என்னும் மாமனிதரின் இறப்பு அதற்குக் காரணமாக அமைந்தது. ஐம்பத்தாறு வயதில் ஜாப்ஸ் காலமானார்.
ஜாப்ஸ் போன்ற மாய மனிதரின் காலடிச் சுவடுகளைத் தொடர்வது கடினம். டிம் குக் எதிர்கொண்ட ஆகப்பெரிய சவால் இது.
ஜாப்ஸின் திறமையில் சிறுபங்கு கூட இவரிடம் கிடையாது என்று கேலி பேசியவர்கள் பலர். தன் மீது வீசப்பட்ட கணைகளை டிம் எதிர்கொண்ட விதம் அசாத்தியமானது. உள்ள உறுதியில் ஒரு சிறு விரிசலும் இல்லாத ஒருவரால் மட்டுமே அவ்வாறு செய்ய முடியும்.
ஆப்பிள் தேரை டிம் குக் என்னும் சாரதி வழிநடத்திய கதை சுவாரசியமானது. அவர் சந்தித்த சவால்கள் நமக்கான பாடம்.
















Add Comment