நீரின்றி அமையாது உலகு என வள்ளுவர் 2000 வருடங்களுக்கு முன்பே எழுதியுள்ளார். விஞ்ஞானிகள் மனிதர்களின் மீது அதீத நம்பிக்கை கொண்டுள்ளனர். இவர்கள் பூமியை விரைவில் வாழத்தகுதி அற்ற இடமாக்கி விடுவார்கள் என்று வேறு கிரகங்களில் நீர் உள்ளதா என்ற ஆராய்ச்சியில் உள்ளனர்.
செவ்வாய்க் கிரகத்தில், சூரியக் குடும்பத்தில் இருக்கும் சில சந்திரன்களில் நீரின் மூலக்கூறுகள் இருப்பதை ஏற்கெனவே அவர்கள் உறுதிசெய்துள்ளனர். தற்போது நம் காலடியிலேயே இயற்கை ஓர் அற்புதத்தினை மறைத்து வைத்துள்ளது தெரிய வந்துள்ளது.
பல்லாயிரம் வருடங்களாக நாம் அறிந்தது பூமியின் மேற்பரப்பில் உள்ள கடல்கள், பனிப்பாறைகள், ஆறு, குளங்களில் உள்ள நீரை மட்டுமே. சமீபத்தில் விஞ்ஞானிகள் புவியின் மேல் அடுக்கிலிருந்து 600 கிலோமீட்டர்களுக்கும் கீழ் நீர் இருப்பதை உறுதி செய்துள்ளனர். இந்தக் கண்டுபிடிப்பினால் நாம் நீர் சுழற்சி மீது வைத்திருந்த கண்ணோட்டங்கள் மாறிவிட்டன.
















Add Comment